எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, November 21, 2018

நாட்டுப்புறவியல் பொருண்மை



நாட்டுப்புறவியல் பொருண்மை
புதியவன்

நாட்டுப்புறவியல் என்பது ‘நவீன நாகரிகத்திற்கு வெளியே’ என்பதாக விளக்கம் பெறுகின்றது. நாடு என்பது காட்டிற்கு முரணாகும். காடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்படாத இயற்கை பரப்பாகும். நாடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்பட்ட செயற்கை பரப்பாகும். மனித செயல்களால் பண்பாடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் நவீன நாகரிகத்தின் சின்னமாக நாடு கட்டமைந்திருக்கிறது. நாட்டுப்புறம் என்பது நவீன நாகரிகத்தால் புதுப்பிக்கப்படாமல் காடு நோக்கி விரவிக்கிடக்கின்ற பண்பாடாக அறியப்படுகின்றது. நாட்டுப்புறவியல் என்பது நவீன நாகரிக பண்பாட்டாளர்களால் நவீன நாகரிகத்திற்கு வெளியிலுள்ள பழமைப் பண்பாட்டாளர்களை அறிவதற்கான நடைமுறை அறிவியலாகக் கட்டமைந்திருக்கின்றது. நாட்டுப்புறவியலுக்கு முரணாக நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடல் பயன்படுகின்றது. நாகரிகத்திற்கு உரியவர்கள் அல்லது நாகரிகத்திற்கு முன்னோடிகள் என்ற அர்த்த வெளிப்பாடாக இச்சொல்லாடல் கட்டமைந்திருக்கின்றது. நாட்டுப்புறவியல் என்பது அநாகரிகமானச் சொல்லாடல். நாட்டார் வழக்காற்றியல் என்பதே நாகரிகமான வழக்காக உணர முடிகிறது.

No comments:

அதிகம் படித்தவை