எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, October 2, 2018

தென்றல் வந்து தீண்டும்போது…டப்பிங் _ ஜோதிப்பிரியா

(அவதாரம் படத்தில் இளையராஜா இசையில் புகழ் பெற்ற பாடல் ;
தென்றல் வந்து தீண்டும்போது…
சமூகவிஞ்ஞானக் கலைப்பயிற்சிக்காக டப்பிங் செய்யப்படுகிறது)
அறிவன்புடன்  _  ஜோதிப்பிரியா
வளவனூர்

தேர்தல் வந்து தீண்டும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்
ஆட்சி வந்து பிடிக்கும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்
ஆட்சி மாறிப் போகுதம்மா மக்களௌல்லாம் நாசமம்மா
மக்களுக்கு ஏற்றபடி ஆட்சியெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக்கண்ணே
(தேர்தல் வந்து)
நிலங்கள் இல்லாமலே விவசாயம் சாய்ந்து போனது
தண்ணீர் இல்லாமலே உயிரினம் கண்ணீர் வடிக்குது
மரங்கள் இல்லாமலே குயிலெல்லாம் செத்து மடியுது
எதுவும் இல்லாமலே விலங்கெல்லாம் தவியாய் தவிக்குது
ஓட நீரோட இந்த உலகில் இருந்ததம்மா
காயும் அதுகாயும் இந்தக் காலம் அதுபோல
உணவு என்றாலே நினைவில் வரும் வலிகளே
(தேர்தல் வந்து)
மரங்கள் இறந்தாலே அரசெல்லாம் அமைதி காக்குது
இவற்றை  நினைத்தாலே உடம்பெல்லாம் ஏனோ வெடிக்குது
ஆலம் விழுதாக உலகெல்லாம் ஒன்று கூடுது
மக்கள் அரசாலே இதுவெல்லாம் மீண்டும் துளிர்க்குது
குயிலே குயிலினமே கொஞ்சம் சத்தமாய் கூவுங்கம்மா
கிளியே கிளியினமே அதை கதையாய்ப் பேசுங்கம்மா
நிஜமாய் நிச்சயமாய் ஆவதில்லையோ உண்மைதான்

தேர்தல் வந்து தீண்டும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்
ஆட்சி வந்து பிடிக்கும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்
ஆட்சி மாறிப் போகுதம்மா மக்களௌல்லாம் நாசமம்மா
மக்களுக்கு ஏற்றபடி ஆட்சியெல்லாம் மாறுமம்மா
உள்ளபடி உண்மைகள் என்ன என்ன
வன்மைகள் என்ன என்ன
தேர்தல் வந்து தீண்டும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்
ஆட்சி வந்து பிடிக்கும்போது என்ன நினைப்பார்கள் கட்சிகள்

No comments:

அதிகம் படித்தவை