புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் படித்தவை
-
இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 1.1. முன்னுரை எது இலக்கியம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்களும் கலந்துரையாடல்கள...
-
இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்) https://pazhaiyavan.blogspot.com/p/blog-page_80.html புதியவன் இலக்கியம் ...
-
புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் ச . பாலமுருகன் சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் ச . பாலமுருகன் ஆவார் . ...
-
ஆய்வு நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் தனித் தன்மையான வாழ்க்கை எத்தகைய முறையில் விவர...
4 comments:
அன்புள்ள தந்தைக்கு (25.08.2014-நூல் வெளிவந்த தருணம்)
நீங்கள் எனக்குத் தாய் மட்டுமல்ல. நேசத்திற்குரிய தோழி. நாம் கலந்துரையாடினோம். விவாதித்தோம். சண்டையிட்டோம். அதைவிட அதிகமாக நேசித்தோம். நம் உலகை புரிந்துகொள்ள எவ்வளவோ உரையாடினோம். நேர்மையானக் கண்ணீரைப் பெண்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும் என்பார்கள். ஏனெனில், பெண் இயற்கையின் உருவம். தலைமைமிக்க தாய்மை பண்பு பெண்ணிடமே இருக்கின்றது. என் தாயிடம் இரண்டு பண்புகளைக் கற்றிருப்பதாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். 1.மனிதநேய உணர்வு, 2.நேர்மையானக் கண்ணீர். பெண் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை என்கிறது சமூகவிஞ்ஞானம். என் நினைவிற்குத் தெரிந்து சொல்கிறேன். நான் உணர்ந்த முதல் பெண் விடுதலை உணர்வாளராக உங்களையே நினைத்திருக்கிறேன். “ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டத் தாய்“. இந்த நூல் என்னைச் சான்றோனாக அங்கீகரித்து இருக்கின்றது. சமகாலம் மட்டுமல்ல, என்னை நாளைய தலைமுறைகளும் பேசும். நானும் சான்றோனாகியிருப்பதாக உறுதியாக நம்புகிறேன். எனது பாசமிக்க அம்மாவிற்கு (கே.ருக்மணி) என்றும் பேரன்புடன்… புதியவன் (கே.சிவக்குமார்)
அன்புள்ள தந்தைக்கு(25.08.2014-நூல் வெளிவந்த தருணம்)
நீங்கள் நல்ல கலை உணர்வாளர். வெளியில் நடித்தாலும் உள்ளக்குள் நல்ல மனிதர். நமது சக்திக்கேற்ற வறுமையை அனுபவித்தக் காலங்கள் உண்டு. அப்போது நேர்மையாக வாழ விடாத இந்த உலகத்தைப் பற்றி நொந்துகொண்டீர்கள். உங்கள் சமூக உணர்வுகளுக்கு நான் விடையாக விளைந்திருக்கிறேன். எனது உலகப்பார்வை கடவுளை மறுக்கின்ற அறிவியல் தத்துவமாகம். ஆனாலும், உங்கள் குரலில் இனிக்கும் பக்திப் பாடல்கள் என் உணர்வுகளைச் சிலிர்க்கச் செய்யும். என் மீதுள்ள உங்கள் கோபங்களுக்கும் அவமதிப்புகளுக்கும் பின்னாலுள்ள பாசம் எனக்கு தெரியும். நம் உலகம் மிக மோசமானது. பாசங்களைப் பரிமாறக்கூட நமக்குக் கற்றுத்தரவில்லை. தந்தைக்கு மகன் ஆற்றும் கடன் சான்றோனாதல் என்கிறார்கள். இந்த நூல் என்னை சான்றோனாக அங்கீகரித்திருக்கின்றது. சமகாலம் மட்டுமல்ல, என்னை நாளைய தலைமுறைகளும் பேசும். நானும் சான்றோனாகியிருப்பதாக உறுதியாக நம்புகிறேன். எனது பாசமிக்கத் தந்தைக்கு (ச.கேசவன்) என்றும் பேரன்புடன்… புதியவன் (கே.சிவக்குமார்)
அன்புள்ள அண்ணனுக்கு
நீங்கள் என் நேசத்திற்குரிய அண்ணன் (கே.நாகராஜன்). உங்களைப் பெயர் சொல்லியோ, வா போ என்றோ ஒருமையில் அழைத்ததில்லை. விதிவிலக்காக ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம், நினைப்பில்லை. சிறுவயது விளையாட்டுச் சண்டைகளை நினைத்துப் பார்க்கிறேன். டேய் அண்ணா! போடா அண்ணா! என்றுதான் கோபித்துள்ளேன். நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு முன்புவரை நாம் உணர்வளவில் நண்பர்களாக வாழ்ந்தோம். ஒளிவுமறைவற்ற நேர்மையானப் பேச்சு. சண்டையிட்டுக் கொண்டாலும் அதிகமாகவே நேசித்தோம். பள்ளிக்கூடத்தில் பிரிவதற்குமுன் முத்தமிட்டுச் செல்வோம். திண்பண்டங்களுக்காகச் சண்டையிட்டுள்ள அதே காலங்களில் திண்பண்டங்களை எடுத்துவந்து பகிர்ந்து உண்டுள்ளோம். நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது உங்களுக்காக வகுப்பறைக்குள் நுழைந்து சண்டை போட்டேன். சோப்பு முட்டைகளை ஊதி விளையாடியவர்களை ஆர்வமாக வேடிக்கை பார்த்தேன். சேர்ந்து விளையாடக் கெஞ்சினேன். நாம் சக்திக்கேற்ற வறுமையை அனுபவித்தக் காலமது. இதை கவனித்த நீங்கள் எனக்காக முயற்சி செய்தீர்கள். குளிர்பான ஸ்ட்ராவை எடுத்து, துளையிட்டு, கம்பி வளைத்து, டப்பாவில் சோப்புத் தண்ணீர் கரைத்து, என்னை ஊதி விளையாட வைத்து இரசித்தீர்கள். உங்கள் கண்களில் அன்று பெருமித உணர்வு நிழலாடியது. இன்று நம் வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது. உங்கள் வாழ்க்கை முறையும் எனது வாழ்க்கை முறையும் வேறுவேறாக இருக்கின்றது. நம் வாழ்க்கை பற்றிய உங்கள் உலகப்பார்வையும் எனது உலகப் பார்வையும் வேறுவேறு. சகோதர உணர்வால் ஒட்டி இருக்கின்றோம். நமது நட்புணர்வில் கண்ணிற்கு தெரிந்தே பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. இது எதார்த்தம். ஆனாலும், கடந்தகால நினைவுகள் நம் நேசத்தை வலிமைபடுத்துகின்றன. விரலை விட்டுப் பறந்த வண்ணத்துப்பூச்சி தன் நிறத்தை விட்டுச் சென்றது போன்ற உணர்வு என்னைப் புதுப்பிக்கின்றது. உங்கள் இணையாளர் எனக்கு அண்ணி. எனக்குத் தங்கை போன்றவர். இவரை நம் அம்மா மகளைப் போன்று நினைப்பதுண்டு. எனக்கும் தங்கை போன்ற நினைப்பு உண்டு. நீங்கள் இருவரும் நல்ல இணையாளர்களாக சிறப்பு பெறுவீர்கள் என்று நம்புகிறேன். வளர்ந்த நாட்டு மக்கள் அறிவியல் பாடங்கள் உட்பட அனைத்தையும் தாய்மொழி வழியாகவே பயில்கிறார்கள். அறிவியல் தத்துவ அடிப்படையில் இத்தகைய கல்வி முறையே சரியாகும். உங்கள் பிள்ளைக்கு நான் சிற்றப்பன். நம் பிள்ளை (சுராஜ்) எந்த மொழியை விரும்பினாலும் படிக்கட்டும். ஆனால், அடிப்படையில் தாய்மொழியில் தேர்ந்தவனாக உருவாக வேண்டும். எனது புத்தகத்தை அவன் படித்துணர வேண்டும். இது அவனது சமூக உணர்விற்கு இன்றியமையாதத் தேவை. அதற்காகவாவது அவனை தாய்மொழியை நேசிப்பவனாக உருவாக்கவும். வேகமான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருந்தாலும் நிதானமான வாழ்விற்காகத் தொடர்ந்து நேசிப்போம். என்றும் பேரன்புடன்… புதியவன் (கே.சிவக்குமார்)
Post a Comment