கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
(குறிப்புகள்)
(உலக இலக்கியம் - முதல் தரம்)
காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ்
ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது
அது கம்யூனிசம் என்னும் பேய்
கம்யூனிசமுமே ஒரு சக்தியாகிவிட்டது என்பதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டன
கம்யூனிஸ்டுகள் தங்கள் கண்ணோட்டத்தை குறிக்கோள்களை தங்கள் போக்குகளை உலகம் முழுவதற்கும் முன்னால் பகிரங்கமாக வெளிப்படுத்தி கட்சியின் அறிக்கை ஒன்றின் மூலமாகவே கம்யூனிசம் என்னும் பேய் பற்றிய பாட்டி கதையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது
இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களில் வரலாறாகவே இருந்துள்ளது
சுதந்திர மனிதனும் அடிமையும் உயர் குலத்தோனும் பாமரனும் பிரபுவும் பண்ணை அடிமையும் கைவினைச் சங்க விற்பன்னனும் கைவினைஞனும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவரை ஒருவர் எப்போதும் எதிர்ப்பவர்களாய் சிலவேளை மறைந்து கிடக்கிறதும் சிலவேளை பகிரங்கமாக வெளிப்படுத்துவதுமான போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர்
இந்தப் போராட்டம்
ஒவ்வொரு முறையும்
சமுதாயம் அனைத்தையும்
புரட்சிகரமாக மறு கட்டமைப்பு செய்வதிலோ
போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோ முடிவடைந்தது
வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலுமே சமுதாயம் பல்வேறு படிநிலை பிரிவுகளாக பல்வேறு மேல் கீழ் சமூக தகுதிகளை கொண்ட ஒழுங்கு அமைப்புகளாக கட்டமைக்கப்பட்டுள்ளதை காண்கிறோம்
நில பிரபுத்துவ சமுதாயத்தின் வீழ்ச்சியிலிருந்து முளைத்தெழுந்த நவீன பூர்ஷ்வா சமுதாயம் வர்க்கப் பகைமையை ஒழித்துக் கட்டவில்லை
சமுதாய முழுவதும் மேன்மேலும் இரண்டு பெரும் பகை முகாம்களாக ஒன்றை ஒன்று நேரடியாக எதிர் கொள்ளும் பூர்ஷ்வா வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்னும் இரண்டு பெரும் வர்க்கங்களாக பிளவு பட்டுக் கொண்டிருக்கிறது
முதன் முதலில் தோன்றிய நகரங்களில் இருந்த நகரத்தார் மத்திய காலத்தில் பண்ணை அடிமைகளில் இருந்து தோன்றியவர்களாவர்
இந்த மத்திய தர வர்க்கத்தினரில் இருந்து பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆரம்பக் கூறுகள் வளர்ச்சி பெற்றன
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதும் ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் கப்பல் போக்குவரத்தும் ஏற்றம் கண்டு கொண்டிருந்த பூசுவா வர்க்கத்திற்கு புதிய களம் ஒன்றை நிறுவின கிழக்கு இந்திய மற்றும் சீன சந்தைகள் அமெரிக்காவை காலணி ஆக்குதல் காலனி நாடுகளுடன் வணிகம் பரிவர்த்தனை சாதனங்களும் பொதுவாக சரக்குகளும் பெருகியமை ஆகிய வணிகத்திற்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில் உற்பத்திக்கும் முன் எப்போதும் கண்டிராத ஊக்கத்தை கொடுத்து அதன் காரணமாக நொறுங்கி விழுந்து கொண்டிருந்த நில பிரபுத்துவ சமுதாயத்தில் இருந்த புரட்சிகர கூறு விரைவாக வளர்ச்சி அடைவதற்கான தூண்டுதலை தந்தன
இதுவரை தொழில் உற்பத்தியை மேற்கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ அல்லது கைவினை சங்க முறை சந்தைகளில் இருந்து அதிகரித்து வரும் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமல் போய்விட்டது அதன் இடத்தை பட்டறை தொழில் எடுத்துக் கொண்டது
பட்டறை தொழில் செய்யும் மத்திய தர வர்க்கத்தாரால் கைவினை சங்க விற்பனர்கள் ஒதுக்கி தள்ளப்பட்டார்கள்
தனித்தனி பட்டறை ஒவ்வொன்றிலும் உழைப்பு பிரிவினை ஏற்பட்டதன் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட வெவ்வேறு கைவினை சங்கங்களுக்கு இடையிலான உழைப்பு பிரிவினை மறைந்து ஒழிந்தது
இதற்கு இடையே சந்தைகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தன
தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன
பட்டறை தொழிலும் கூட இப்போது போதாது ஆகிவிட்டது
அந்த நிலையில் தான் நீராவி இயந்திரங்களும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின
பட்டறை தொழிலின் இடத்தை பெறுவீத தொழில் உற்பத்தி எடுத்துக் கொண்டது
பட்டறை தொழில் செய்து வந்த மத்திய தர வர்க்கத்தின் இடத்தை தொழில்நுட்பத்தின் கோடீஸ்வரர்கள் பெரும் பெரும் தொழில்நுட்பத்தின் சேனைகளின் தளபதிகள் நவீன பூர்ஷ்வாக்கள் எடுத்துக் கொண்டனர்
பெருவீத தொழில் உற்பத்தி உலக சந்தையை நிறுவி இருக்கிறது
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதானது இதற்கான பாதையை வகுத்ததே வணிகம் கப்பல் போக்குவரத்து நில வழி தகவல் தொடர்புகள் ஆகியவற்றுக்கு இந்த உலக சந்தை மிகப்பெரும் வளர்ச்சியை தந்துள்ளது
இந்த வளர்ச்சியானது தன் பங்கிற்கு தொழில் உற்பத்தியின் விரிவாக்கத்திற்கான எதிர்வினை ஆற்றியது
தொழில் உற்பத்தி வணிகம் கப்பல் போக்குவரத்து ரயில் பாதைகள் ஆகிய எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அந்த அளவு பூர்ஷ்வா வர்க்கமும் வளர்ச்சி அடைந்தது
தனது மூலதனத்தை பெருகச் செய்து மத்திய காலம் விட்டுச் சென்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்கு தள்ளியது
ஆகவே நவீன பூர்ஷ்வா வர்க்கமுமே நீண்டகால வளர்ச்சிப் போக்கின் விளைவாக பொருள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக உருவானதே என்பதை பார்க்கிறோம்
பூர்ஷ்வா வர்க்கத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏற்ப அந்த வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் ஏற்பட்டது
நில பிரபுத்துவ பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட படிநிலை பிரிவாகவும்
மத்திய கால கம்யூன்களில் ஆயுதமேந்திய சுயாட்சி கொண்ட சங்கமாகவும்
ஓரிடத்தில் சுதந்திரமான நகர குடியரசாகவும்
இன்னொரு இடத்தில் முடியாட்சியில் வரி விதிக்கப்படும் மூன்றாவது படிநிலை பிரிவாகவும்
பின்னாளில் பட்டறை தொழில் இருந்த காலகட்டத்தில் படிநிலை பிரிவுகளை அடித்தளமாகக் கொண்ட முடியாட்சிக்கு வரம்பில்லா முடியாட்சிக்கு பிரபு குலத்தின் பலத்தை சமன்படுத்த சேவை புரியும் எதிர் படையாகவும்
பொதுவாக பெரும் முடியாட்சிகளின் ஆதாரத்தூணாகவும் இருந்த பூர்ஷ்வா வர்க்கம்
இறுதியில் பெருவீத தொழிலும் உலக சந்தையும் நிறுவப்பட்டது முதல் நவீன பிரதிநிதித்துவ அரசில் தனக்கு மட்டுமே உரிய அரசியல் ஆதிக்கத்தை வென்றெடுத்துக் கொண்டது
நவீன அரசு நிர்வாக எந்திரம் என்பது ஒட்டுமொத்த பூர்ஷ்வா வர்க்கத்தின் பொது உபகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல
பூர்ஷ்வா வர்க்கம் வரலாற்றில் மிகப் புரட்சிகரமான பாத்திரம் வகித்திருக்கிறது
பூர்ஷ்வா வர்க்கம் எங்கெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ அங்கு அது நில பிரபுத்துவ மரபான அதிகார உரிமை உறவுகள் நாட்டுப்புற பாரம்பரிய உறவுகள் அனைத்தையும் அழித்துவிட்டது
இயற்கையிலேயே மேலானவர்களுடன் மனிதனை கட்டிப்போட்டிருந்த பல்வேறு வகையான நிலபிரபுத்துவ பிணைப்புகளை கருணை காட்டாமல் அறுத்துறிந்து அப்பட்டமான சுயநலம் உணர்ச்சியற்ற பண பட்டுவாடாவை தவிர மனிதர்களிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் செய்து விட்டது
பக்தி உணர்வு அறக்காட்டு பண்புகளின் உற்சாக வெளிப்பாடுகள் குறுமதி குட்டி பூர்ஷ்வா உணர்ச்சி பசப்பு ஆகியவை தரும் அற்புத சுகமளிக்கும் பரவசங்கள் அனைத்தையும் தன்னல கணக்கீடு என்னும் உரை பணி குளிர் நீரில் மூழ்கடித்து விட்டது
மனிதனின் மாண்பை பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது
சாசனங்களின் மூலம் பெறப்பட்டிருந்த எண்ணற்ற பாடுபட்டு பெற்ற சுதந்திரங்களுக்கு பதிலாக மனசாட்சி இல்லாத ஒரே ஒரு சுதந்திரத்தை வணிக சுதந்திரத்தை நிறுவியுள்ளது
சுருங்கக் கூறின் மத அரசியல் போலி கருத்துகளால் மூடி மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்கு பதிலாக அப்பட்டமான வெட்கமில்லாத நேரடியான மூடி மழுப்பாத சுரண்டலை கொண்டு வந்துள்ளது
மரியாதைக்கு உரியதாகவும் பயபக்தியுடன் பார்க்கப்பட வேண்டியதாகவும் இதுவரை கருதப்பட்ட பணி ஒவ்வொன்றையும் பூர்ஷ்வா வர்க்கம் மகிமை இழக்கச் செய்து விட்டது
மருத்துவரையும் வழக்குரைஞரையும் மத குருவையும் கவிஞனையும் கற்றறிந்த உரையும் தன்னால் கூலி வழங்கப்படும் கூலி உழைப்பாளிகளாக மாற்றியுள்ளது
பூர்ஷ்வா வர்க்கம் நெகிழச் செய்யும் பாச வலையை குடும்ப உறவிலிருந்து கிழித்தெறிந்து அந்த உறவை வெறும் பண உறவாக குறுக்கி விட்டது
பிற்போக்காளர்களால் போற்றி புகழப்படுகின்றதே மத்திய காலத்தில் முரட்டுத்தனமாக காட்டப்பட்டு வந்த உடல் வலிமை சார்ந்த ஆற்றல் அது எவ்வாறு சோம்பேறித்தனமான அசிரத்தைக்கு துணை போயிற்று என்பதை பூர்ஷ்வா வர்க்கம் எடுத்துக்காட்டி உள்ளது
மானுட செயல்பாட்டால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதை முதன் முதலாக எடுத்துக் காட்டியது அதுதான்
எகிப்திய பிரமிடுகள் ரோமானிய கட்டுக்கால்வாய்கள் கோதிக் தேவாலயங்கள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவற்றை அது சாதித்துள்ளது பெருந்திரளாக மக்கள் புலம் பெயர்ந்து சென்ற முற்கால நிகழ்வுகள் சிலுவைப் போர் பயணங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான பெரும் பயணங்களை நடத்தியுள்ளது
இடைவிடாமல் உற்பத்திக் கருவிகளை புரட்சிகரமாக மாற்றி அமைக்காமல் அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும் அத்துடன் ஒட்டுமொத்த சமூக உறவுகளையும் புரட்சிகரமாக மாற்றி அமைக்காமலும் புஷ்வா வர்க்கத்தால் நிலவவே முடியாது
இதற்கு மாறாக முந்தைய தொழில் உற்பத்தி வர்க்கங்கள் அனைத்துக்கும் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லாத வடிவத்தில் அப்படியே பேணி பாதுகாப்பது தான் அவை நிலவுவதற்கான முதல் நிபந்தனையாக இருந்தது
பொருள் உற்பத்தி இடைவிடாது மாற்றி அமைக்கப்படுதலும் சமுதாய நிலைமைகள் அனைத்தும் இளையராது நிலை குலைதளம் முடிவே இல்லாத நிச்சயம் அற்ற தன்மையும் இயக்கமும் புஸ்வா சகாப்தத்தை முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்தி காட்டுகின்றன
நிலை நிறுத்தப்பட்ட திருவேறிப்போன உறவுகள் அனைத்தும் அவற்றோடு தோன்றி அவற்றை பின்தொடரும் காலங்காலமாக மதிக்கப்பட்டு வந்த பழைய கருத்துக்களும் அபிப்ராயங்களும் மறைந்து விடுகின்றன
புதிதாக உருவாக்கப்பட்ட கருத்துக்களும் அபிப்பிராயங்களும் அவை கெட்டி படுவதற்கு முன்பே பழசாகி விடுகின்றன நிலை நிறுத்தப்பட்ட திடமான அனைத்துமே காற்றில் கரைந்து விடுகின்றன
புனிதமானவை அனைத்தும் புனித மற்றவை ஆக்கப்படுகின்றன இறுதியில் மக்கள் வாழ்க்கையில் தங்களுக்குள்ள நிலையையும் பரஸ்பர உறவையும் மயக்கம் தெளிந்த கண்களுடன் எதிர்கொள்ளும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்
பூர்ஷ்வா வர்க்கத்தின் உற்பத்தி பொருள்களுக்கு மேன்மேலும் விரிவடைந்து வரும் சந்தை தேவைப்படுகிறது
விரிவடைந்து வரும் சந்தித்தேவை அவ்வர்கத்தை புவிபரப்பு முழுவதிலும் ஓடும்படி விரட்டுகிறது
பூர்ஷ்வா வர்க்கம் எல்லா இடங்களிலும் கால் பதிக்க இடம் தேட வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவ வேண்டியதாகிறது
உலகச் சந்தையை சுரண்டுவதன் மூலமாக பூஷ்வா வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தி நுகர்வு ஆகியவற்றுக்கு அனைத்து உலக தன்மையை வழங்கி இருக்கிறது
பிற்போக்காளர்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படும் வகையில் தொழில் உற்பத்தியின் தேசிய அடித்தளத்தை அகற்றியுள்ளது
நீண்ட கலமாக நிறுவப்பட்டிருந்த பழைய தேசிய தொழில்கள் அனைத்தையும் அழித்துவிட்டது அல்லது தினந்தோறும் அழித்துக் கொண்டு வருகிறது
நாகரிக நாடுகள் அனைத்துக்கும் ஜீவ மரண போராட்டத்தை ஏற்படுத்தி உள்ள புதிய தொழில்களின் நுழைவு முன்பிருந்ததைப் போல உள்நாட்டு கச்சா பொருட்களை மட்டுமல்ல தொலைதூர பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கச்சா பொருள்களையும் பயன்படுத்துபவை
அவற்றின் உற்பத்தி பொருள்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுபவை
ஒரு நாட்டின் உற்பத்தியால் பூர்த்தி செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் தொலைதூர நாடுகள் மண்டலங்கள் ஆகியவற்றின் உற்பத்திகளால் பூர்த்தி செய்யப்படக்கூடிய புதிய தேவைகள் எழுந்துள்ளது காண்கிறோம்
பழைய வட்டார தேசிய தன்னிறைவுக்கும் தனிமைப்பட்டு நிலைக்கும் பதிலாக பல திசைகளில் கிளை விட்டு வளரும் பன்முகத் தொடர்பும் உலகளாவிய வகையில் நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் தன்மையும் ஏற்பட்டுள்ளன
பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படித்தான் அறிவுத்துறை உற்பத்தியில் தனித்தனி நாடுகளின் அறிவுத்துறை படைப்புகள்
அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சொத்தாகின்றன
தேசிய ஒரு தலைப்பட்சமும் குறுகிய மனப்பான்மையும் மேன்மேலும் சாத்தியமற்றவை ஆகின்றன
பல்வேறு தேசிய வட்டார இலக்கியங்களில் இருந்து ஓர் உலக இலக்கியம் தோன்றுகிறது
உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் துரிதமாக மேம்படுத்துவதன் மூலமும்
பிரம்மாண்டமான முறையில் வளர்க்கப்படும் தொடர்பு சாதன வசதிகள் மூலமும்
அனைத்து தேசங்களையும் மிக அநாகரிகமான தேசங்களையும் கூட நாகரிகத்திற்குள் இழுத்துக் கொள்கிறது
தன்னுடைய மலிவான சரக்குகள் என்னும் பீரங்கிகளைக் கொண்டு சீன மதில்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கி அநாகரீகர்களுக்கு அந்நியர்கள் மீதுள்ள கடுமையான அடங்கா வெறுப்பை பணிய வைக்கிறது
அனைத்து தேசங்களையும் அவை அழியாமல் இருக்க வேண்டுமானால் பூர்ஷ்வா உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது
தமது நாடுகளில் நாகரீகம் என்று கூறப்படுவதை முளைக்குமாறு அதாவது அவையுமே பூர்ஷ்வா நாடுகளாகுமாறு நிர்பந்திக்கிறது
சுருங்கக் கூறின்
தனது சாயலில்
ஓர் உலகத்தை படைக்கிறது
பூர்ஷ்வா வர்க்கம் நாட்டுப்புறத்தை நகர் புறத்தில் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கிறது
மாபெரும் நகரங்களை எழுப்பியிருக்கிறது கிராமப்புற மக்கள் தொகை ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள்தொகையின் அளவை அதிகரிக்கச் செய்து தனிமைப்பட்டு ஒதுங்கியுள்ள கிராமப்புற வாழ்வியலில் இருந்து ஒரு பகுதியினரை மீட்டுள்ளது
மக்கள் தொகையும்
உற்பத்தி சாதனைகளும் சொத்துடைமையும்
சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு பூர்ஷ்வா வர்க்கம் மேன்மேலும் முடிவு கட்டி வருகிறது
மக்கள் தொகையை
அடர்ந்து திரளும்படி செய்து உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி
சொத்துரிமையை
ஒரு சில கைகளில்
குவிய வைத்துள்ளது
தனித்தனி நலன்கள்
சட்டத் தொகுப்புகள்
அரசாங்கங்கள்
வரி விதிப்பு முறைகள்
ஆகியவற்றைக் கொண்டிருந்த சுயேசையானவையாகவோ நெகிழ்வான கூட்டமைப்பாகவோ இருந்த மாநிலங்கள்
ஒரே அரசாங்கத்தை
ஒரே சட்டத் தொகுப்பை
ஒரே தேசிய வர்க்க நலனை
ஒரே எல்லையை
ஒரே சுங்கவரி முறையை
கொண்ட ஒரே தேசமாக
ஒன்று சேர்க்கப்படுகின்றன
நூறாண்டு கூட நிறைவுறாத தனது வர்க்க ஆட்சியின்போது
பூர்ஷ்வா வர்க்கம்
முந்தைய தலைமுறைகள் அனைத்தும்
உருவாக்கியவற்றை காட்டிலும் மிகவும் மலைக்க வைக்கிற
மேலும் பிரம்மாண்டமான
உற்பத்தி சக்திகளை
உருவாக்கி இருக்கிறது
இயற்கை சக்திகளை மனிதர்களுக்கு வசப்பட செய்தல்
இயந்திரங்கள்
வேளாண்மையிலும் தொழில்நுட்பத்திலும் ரசாயனத்தை பயன்படுத்துதல்
நீராவி கப்பல் போக்குவரத்து
ரயில் பாதைகள்
மின்விசை தந்தி
முழு கண்டங்களையே சாகுபடிக்கு ஏற்ற விளைநிலங்களாக பயன்படுத்துதல்
ஆறுகளை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றனவாக செய்தல்
பாதாள உலகில் இருந்து தோன்றினாற்போல்
மக்கள் திரளினரை
ஆங்காங்கே மாய வித்தை போல திரளச்செய்தல்
சமூக உழைப்பின் கருப்பையில்
இத்தகைய உற்பத்தி சக்திகள்
உறங்கிக் கொண்டிருந்தன என்று
முந்தைய நூற்றாண்டுகளில்
ஏதேனும் கனவுதான் கண்டிருக்குமா?
எந்த உற்பத்தி சாதனங்கள் பரிவர்த்தனை சாதனங்கள் ஆகியவற்றின் மீது
பூர்ஷ்வா வர்க்கம்
தன்னை கட்டி எழுப்பியுள்ளதோ அவை நில பிரபுத்துவ சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டவை
என்பதைப் பார்க்கிறோம்
இந்த உற்பத்தி சாதனங்கள் பரிவர்த்தனை சாதனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியின்
குறிப்பிட்ட கட்டத்தில்
நில பிரபுத்துவ சமுதாயம் எந்த நிலைமைகளில் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ
அந்த நிலைமைகள் வேளாண்மை தொழிலுற்பத்தி ஆகியவற்றின் நில பிரபுத்துவ ஒழுங்கமைப்பு.
சுருங்கக் கூறின்
நில பிரபுத்துவ சொத்துடைமை உறவுகள்
ஏற்கனவே வளர்ச்சி அடைந்து விட்ட உற்பத்தி சக்திகளுக்கு பொருந்தாதவை ஆகிவிட்டன
அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பதிலாக இடையூறு செய்தன
அவற்றைக் கட்டி போடும் பல தளைகளாகின. அந்தத் தலைகளை உடைத்து எறிய வேண்டி இருந்தது. அவை உடைத்தெரியப்பட்டன.
அவற்றின் இடத்திற்குள் தடையற்ற போட்டியும் அதனுடன் கூடவே அதற்கு தகவமைந்த ஒரு சமூக அரசியல் அமைப்பும் பூர்ஷ்வா வர்கத்தின் பொருளாதார அரசியல் ஆதிக்கமும் நுழைந்தன
இதே போன்றதோர் இயக்கம் நம் கண் எதிரே நடைபெற்று வருகிறது
பூர்ஷ்வா உற்பத்தி உறவுகள்
பரிவர்த்தனை உறவுகள் சொத்துடைமை உறவுகள் மாய வித்தை புரிந்தார் போல் இத்தகைய பிரம்மாண்டமான உற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும் உருவாக்கியுள்ள பூர்ஷ்வா சமுதாயம் தனது மந்திர உச்சாடனங்கள் மூலம் பாதாள உலகில் இருந்து வரவழைக்கப்பட்ட சக்திகளை கட்டுப்படுத்த இயலாதுபோன மந்திரவாதியைப் போன்றதாகும்
கடந்த சில பத்தாண்டுகளின் தொழில் உற்பத்தி வணிகம் ஆகியவற்றின் வரலாறு நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராக நவீன உற்பத்தி சக்திகள் நடத்தி வந்த கலகத்தின் பூர்ஷ்வா வர்க்கம் அதனுடைய ஆட்சி ஆகியன நிலவுவதற்கான நிலைமைகளாக உள்ள சொத்துரிமை உறவுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கழகத்தின் வரலாறே தவிற வேறல்ல
இடைவெளி விட்டு திரும்பத் திரும்ப நிகழ்கிற வணிக நெருக்கடிகளை குறிப்பிட்டாலே போதும்
திரும்பத் திரும்ப வரும் இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறையும் முன்பை விட மேலும் அச்சுறுத்தும் வகையில் பூர்ஷ்வா சமுதாயம் முழுவதன் இருத்தலையே கேள்விக்கு உட்படுத்துகின்றன
இந்த வணிக நெருக்கடிகளின் போது ஒவ்வொரு முறையும் இருக்கின்ற உற்பத்தி பொருள்களில் பெரும் பகுதி மட்டும் இன்றி முன்பு ஏற்கனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியும் அழிக்கப்படுகின்றது
இதற்கு முந்தைய எல்லா சகாப்தங்களிலும் அபத்தமானதாக கருதப்பட்டிருக்கக்கூடிய ஒரு தொற்று நோய் மிகை உற்பத்தி என்னும் தொற்று நோய் பரவுகிறது
சமுதாயம் திடீரென்று பின்னுக்கு இழுக்கப்பட்டு தற்காலிக காட்டுமிராண்டி நிலையில் வைக்கப்படுகிறது
ஏதோ ஒரு பஞ்சமோ அனைத்தையும் அழிக்கும் ஒரு போரோ
பிழைப்பு சாதனம் ஒவ்வொன்றும் வழங்கப்படுதலை துண்டித்து விட்டால் போல் தோன்றுகிறது
தொழில் உற்பத்தியும் வணிகமும் அளிக்கப்பட்டு விட்டது போல் தோன்றுகிறது
ஏன் இப்படி?
இதற்கு காரணம் மிதமிஞ்சிய நாகரிகம்
மித மிஞ்சிய பிழைப்பு சாதனங்கள்
மித மிஞ்சிய தொழில் உற்பத்தி மித மிஞ்சிய வர்த்தகம் இருப்பது தான்
சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் சொத்துரிமை உறவுகளை தொடர்ந்து வளர்ச்சியுறச் செய்வனமாக இனி இருப்பதில்லை
மாறாக அந்த உறவுகளுக்கு பொருந்தாத வகையில் வலிமை மிக்கவை ஆகிவிட்டன
அந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடைகள் ஆகி உள்ளன
உற்பத்தி சக்திகள் அந்த தடைகளை கடந்து வந்ததுமே அவை பூர்ஷ்வா சமுதாய முழுவதிலும் சீர்குலைவை கொண்டு வருகின்றன
பூர்ஷ்வா சொத்துரிமை நிலவுதலையே அபாயத்துக்கு உள்ளாக்குகின்றன
பூர்ஷ்வா சொத்துரிமை உறவுகள் அவற்றால் உருவாக்கப்பட்ட செல்வத்தை சூழ்ந்து கொள்ள முடியாத அளவுக்கு குறுகலாக உள்ளன
பூர்ஷ்வா வர்க்கம் இந்த நெருக்கடிகளை எப்படி சமாளிக்கிறது?
ஒருபுறம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளின் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும்
மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றுதல் பழைய சந்தைகளை கடைசி சொட்டு வரை சுரண்டுதல் ஆகியவற்றின் மூலமும்
அதாவது மேலும் விரிவான மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழிவகுப்பதன் மூலமும் நெருக்கடிகளை தடுப்பதற்கான வழிமுறைகளை குறைப்பதன் மூலமும்
எந்த ஆயுதங்களைக் கொண்டு பூர்ஷ்வா வர்க்கம் நில பிரபுத்துவத்தை வீழ்த்தியதோ அதே ஆயுதங்கள் இப்போது அதற்கு எதிராகவே திருப்பப்படுகின்றன
ஆனால் பூர்ஷ்வா வர்க்கம் தன்னை கொன்றளிக்கும் ஆயுதங்களை வார்த்தெடுத்துள்ளதுடன்
அந்த ஆயுதங்களை கையாளப்போகும் மனிதர்களையும்
நவீன தொழிலாளிகளை பாட்டாளிகளை தோற்றுவித்திருக்கிறது
பூர்ஷ்வா வர்க்கம் அதாவது மூலதனம் எந்த அளவு வளர்ந்ததோ அந்த அளவு பாட்டாளி வருஷம் நவீன தொழிலாளி வர்க்கம் வேலை கிடைக்கும் வரை மட்டுமே வாழ்கிற தங்களது உழைப்பு மூலதனத்தை பெருக செய்கிற வரையிலும் மட்டுமே வேலை கிடைக்கப் பெறுகிற தொழிலாளிகளின் வர்க்கம் வளர்ந்தது
தங்களை சிறுகச் சிறுக விற்க வேண்டியுள்ள இந்த தொழிலாளிகள் இதர வணிகப் பொருள்களைப் போல ஒரு விற்பனை சரக்குதான்
எனவே இதன் விளைவாக இதர வணிகச் சரக்குகளைப் போலவே போட்டியில் ஏற்படும் பல வகை மாற்றங்களும் சந்தையில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கங்களும் அவர்களை பாதிக்கின்றன
விரிந்த அளவில்
இயந்திரங்களை பயன்படுத்துதல் உழைப்பு பிரிவினை
ஆகிய காரணங்களால் பாட்டாளிகளின் உழைப்பு
தனது தனித்தன்மை அனைத்தையும் இழந்துவிட்டது
அதன் காரணமாக தொழிலாளிக்கு அவனது வேலையில் இருந்த கவர்ச்சி அனைத்தும் போய்விட்டது
அவன் இயந்திரத்தின் துணை உறுப்பாக ஆகின்றான்
அவனிடமிருந்து தேவைப்படுவது எல்லாம் மிகவும் எளிமையான மிகவும் சளி பூட்டுகிற மிக எளிதாக பிடிப்படக்கூடிய கைத்திறன் மட்டுமே
எனவே ஒரு தொழிலாளியின் உற்பத்தி செலவு அனேகமாக முற்றிலும் அவனைப் பராமரிப்பதற்கும் இனவிருத்திக்கும் தேவையான புளிப்பு சாதனங்களுக்கு மேல் படாத படி குறுக்கப்படுகிறது ஆனால் ஒரு சரக்கின் விலை அதாவது உழைப்பின் விலையும் கூட அதன் உற்பத்தி செலவுக்கு சமமாகும்
ஆகவே உழைப்பு எந்த அளவுக்கு வெறுக்கத்தக்கதாக அமைகிறதோ அந்த அளவு கூலி குறைகிறது அது மட்டுமல்ல இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதும் உழைப்பு பிரிவினையும் எந்த அளவு அதிகரிக்கின்றனவோ அந்த அளவு வேலைப்பளுவும் அதிகரிக்கிறது
வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ
குறிப்பிட்ட நேரத்தில் கூடுதலான வேலையை கற்பதன் மூலமோ
இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ
இன்ன பிற வழிகளிலோ
மரபான அதிகார உரிமை உறவுகளின் அடிப்படையில் நடத்தப்படும் கைவினை விற்பனனின் சிறு தொழில் கூடத்தை நவீன தொழில் உற்பத்தியானது தொழில்துறை முதலாளியின் பெரும் தொழிற்சாலையாக மாற்றியிருக்கிறது
இங்கு ஒருங்கு திரட்டப்பட்டுள்ள பெருந்திரளான தொழிலாளிகள் படைவீரர்களைப் போல ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர்
அவர்கள் முழுமையான பணிநிலை அமைப்பில் உள்ள மேல்நிலை அதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையின் கீழ் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
அவர்கள் அடிமைப்பட்டு இருப்பது பூர்ஷ்வா வர்க்கத்துக்கும்
பூர்ஷ்வா அரசுக்கும் மட்டுமல்ல
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணி நேரமும் இயந்திரங்களுக்கு மேற்பார்வையாளருக்கு எல்லோருக்கும் மேலாக
தனித்தனி தொழில்நுட்பத்தின் பூர்ஷ்வாவுக்குமே
அடிமை பட்டுள்ளனர்
லாபம் தான் தனது இறுதிக் குறிக்கோள் என்று இந்த சர்வாதிகாரம் எந்த அளவுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறதோ அந்த அளவு அது
மேலும் அற்பத்தனமானதாக மேலும் வெறுக்கத்தக்கதாக
மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது
உடல் உழைப்புக்கு
தேவையான திறனும்
உடல் வலிவும் குறைய குறைய
அதாவது பெருமித தொழில் உற்பத்தி வளர்ச்சி அடைய அடைய
பெண்கள் குழந்தைகள் ஆகியோரின் உழைப்பால் ஆண்களின் உழைப்பு
மேல் மேலும் அகற்றப்படுகிறது
வயது வேறுபாடு
ஆண் பெண் வேறுபாடு ஆகியவற்றை கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் தனித்தன்மையான
சமூகத் தகுதியை
தீர்மானிக்க வேண்டிய நிலை
இனி இல்லாமல் போய் வடுகிறது
எல்லோருமே
உற்பத்தி கருவிகள்தான்
அவர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு
அவர்களின் வயதுக்கு தக்கபடியும் அவர்கள் ஆண்களா? பெண்களா என்பதற்கு ஏற்பவும் கூடுதலாகவோ குறைவாகவோ உள்ளது
ஆளை அதிபரால் இதுவரை சுரண்டப்பட்ட தொழிலாளி
அந்த சுரண்டல் முற்றுப்பெற்று
தனது கூலியை
பணமாக பெற்றுக்கொண்ட உடனேயே பூர்ஷ்வா வர்க்கத்தின் இதர பிரிவினரான
வீட்டுச் சொந்தக்காரர் கடைக்காரர் அடகு வெட்டிக்காரர் ஆகியோர் அவன் மீது பாய்கின்றனர்
இதுவரை இருந்து வரும் சிறு இடைநிலை அடுக்குகள் சிறு தொழில் செய்பவர்கள் வணிகர்கள் வாடகை வட்டி வாங்குபவர்கள் கைவினைஞர்கள் விவசாயிகள் இந்த வர்க்கங்கள் அனைத்துமே படிப்படியாக தாழ்வுற்று பாட்டாளி வர்க்கமாக ஆகின்றனர்
இதற்குப் பெருகித தொழில் உற்பத்திக்கு அவர்களிடம் உள்ள சிறு மூலதனம் போதாததாக இருப்பதும்
மேலும் பெரிய முதலாளிகளுடன் போட்டியில் அவர்கள் வீழ்த்தப்படுவதும்
ஒரு காரணம்
புதிய உற்பத்தி முறைகளால் அவர்களது திறன் மதிப்பிழந்து போய்விட்டது மற்றொரு காரணம்
இவ்வாறு மக்கள் தொகையில் உள்ள இந்த வர்க்கங்கள் அனைத்திலிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆள்கள் சேர்க்கப்படுகின்றனர்
பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களில் நிகழ்கிறது அதன் இருத்தலிலிருந்து
பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிரான அதனுடைய போராட்டம் தொடங்குகிறது
முதலில் அந்த போராட்டம் தனிப்பட்ட தொழிலாளர்களாலும் பின்னர் ஒரு தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்களாலும் பின்னர் ஒரு வட்டாரத்தில் குறிப்பிட்ட தொழிலை செய்பவர்களாலும் தங்களின் நேரடியாக சுரண்டும் தனிப்பட்ட பூசுவாவுக்கு எதிராக நடத்தப்படுகிறது
அவர்கள் பூர்ஷ்பா உற்பத்தி உறவுகள் மீது மட்டுமல்ல
உற்பத்தி கருவிகள் மீதே
தங்கள் தாக்குதலை தொடுக்கின்றனர்
தங்களது உழைப்புடன் போட்டி போடும் இறக்குமதி பொருள்களை அழிக்கிறார்கள்
இயந்திரங்களை சுக்கு நூறாக உடைக்கிறார்கள் தொழிற்சாலைகளை தீவைத்துக் கொளுத்துகிறார்கள்
மத்திய காலத்தில் தொழிலாளிக்கு இருந்ததும் மறைந்து போனதுமான அந்தஸ்தை பலவந்தமாக மீட்டெடுத்துக் கொள்ள முனைகிறார்கள்
இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபடாது நாடு முழுவதிலும் சிதறி கிடப்பவர்களாக
பரஸ்பரம் போட்டியின் காரணமாக பிளவுண்டு கிடப்பவர்களாக இருக்கிறார்கள்
அவர்கள் இங்கேயும் ஒன்று மட்டும் உன்னைக் காட்டிலும் கச்சிதமான சேர்க்கைகளாக அமைகிறார்கள் என்றால் அது இன்னமும் அவர்கள் தானே உருவாக்கிக் கொண்ட செயலுக்கும் உள்ள ஒற்றுமையின் விளைவாக ஏற்பட்டது அல்ல
மாறாக பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒற்றுமையின் விளைவாக ஏற்பட்டதாகும்
அந்த வர்க்கம் தனது அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக
பாட்டாளி மக்கள் முழுவதையுமே இயங்க வைக்கிறது
இன்னும் சிறிது காலத்துக்கு அதனால் அப்படி செய்யவும் முடியும்
இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் தங்கள் சொந்த எதிரிகளை அல்ல
எதிரிகளின் எதிரிகளான வரம்பில்லா முடியாட்சியின் எச்சங்கள்
நில உடமையாளர்கள் தொழில் உற்பத்தி சாராத பூர்ஷ்வாக்கள்
குட்டி பூர்ஷ்வாக்கள் ஆகியோரையே எதிர்த்து போராடுகிறார்கள்
இவ்வாறு வரலாற்று வளர்ச்சி போக்கும் முழுவதும் பூர்ஷ்வா வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது
இவ்விதம் அடையப்பற்ற ஒவ்வொரு வெற்றியும் பூர்ஷ்வா வர்க்கத்தின் வெற்றியே
தொழில் உற்பத்தியின் வளர்ச்சியுடன்
பாட்டாளி வருத்தம் தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மட்டுமல்ல அது பெரும் திரளாக ஒன்று குவிகின்றது
அதன் வலிமை பெருகுகிறது தனது வலிமையை அது முன்னை காட்டிலும் கூடுதலாக உணர்கிறது
தொழிலாளிகளிடம் இருந்த தனித்தன்மைகளை இயந்திரங்கள் மேன்மேலும் அழிப்பதனாலும்
அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி ஒரே மட்டத்துக்கு குறைக்கப்படுவதாலும்
பாட்டாளி வர்க்கத்தின் அணிகளுக்குள்
அதன் நலன்களும் வாழ்க்கை நிலைமைகளும் மேன்மேலும் ஒரே படித்தானதாகின்றது
பூர்ஷ்வாக்கள் இடையே வளர்ந்து வரும் போட்டியும் இதன் விளைவாக ஏற்படும் வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலியை மேன்மேலும் ஏறி இறங்கச் செய்கின்றன
இயந்திரங்கள்
இடைவிடாதே மேம்படுத்துவதும் அந்த மேம்பாடு தொடர்ந்து மேன்மேலும் விரைவாக வளர்ச்சி அடைவதும் அவர்களது வாழ்க்கையை மேன்மேலும் பாதுகாப்பு அற்றதாகுகின்றது
தனிப்பட்ட தொழிலாளிகளுக்கும் தனிப்பட்ட பூர்ஷ்வாக்களுக்கும் ஏற்படும் மோதல்கள்
மேன்மேலும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல் என்னும் தன்மையை பெறுகின்றன
இதனால் தொழிலாளர்கள் பூர்ஷ்வாக்களுக்கு எதிராக ஒன்றிணைப்பு குழுக்களை உருவாக்க தொடங்குகிறார்கள்
கூலி குறையாமல் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றுபடுகிறார்கள்
அவ்வப்போது எழும் இந்த கிளர்ச்சிகளுக்கு ஆயத்தமாக இருப்பதற்கான முன்னேற்பாடாக வளர்ச்சி அடைந்து வரும் சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்
சிற்சில இடங்களில் இந்த கிளர்ச்சிகள் கலகங்களாக வெடிக்கின்றன
தொழிலாளர்கள் அவ்வப்போது வெற்றியடைகிறார்கள்
ஆனால் அது சிறிது காலமே நீடிக்கும் வெற்றி
அவர்களது போராட்டங்களின் உண்மையான பலன் உடனடியான விளைவல்ல
தொடர்ந்து விரிவடைந்து வரும் தொழிலாளர் ஐக்கியத்தில் தான் இருக்கிறது
பெருநீத தொழில் உற்பத்தியால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட தொடர்பு சாதனங்கள்
வெவ்வேறு இடங்களிலும் உள்ள தொழிலாளர்களை ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்து
இந்த ஐக்கியத்துக்கு துணை புரிகின்றன
ஒரே தன்மையுடைய பல்வேறு வட்டார அளவிலான போராட்டங்களை மையப்படுத்தி வர்க்கங்களுக்கு இடையிலான ஒருமித்த தேச அளவிலான வர்க்க அளவிலான போராட்டமாக மாற்றுவதற்கு இந்தத் தொடர்பு தான் தேவைப்படுகிறது
ஆனால்
வர்க்கப் போராட்டம் ஒவ்வொன்றும் அரசியல் போராட்டம் ஆகும்
மத்திய காலத்து நகரத்தார் தங்களது படுமோசமான வட்டார சாலைகளின் துணை கொண்டு பண்ணுறாண்டு காலத்தில் அடைந்த ஐக்கியத்தை
நவீன பாட்டாளிகள்
ரயில் பாதைகளைக் கொண்டு
ஒரு சில ஆண்டுகளில்
சாதித்து விடுகிறார்கள்
பாட்டாளிகளை ஒரு வருடமாக ஒழுங்கமைத்து அதன் மூலம் அதை அரசியல் கட்சியாக ஒழுங்கமைப்பதை தொழிலாளிகள் இடையே நிலவும் போட்டி தொடர்ந்து குலைத்து வருகின்றது
ஆனால் அது மீண்டும் மீண்டும் மேலும் வலுவாக உறுதியாக சக்தி மிக்கதாக எழுகின்றது
பூர்ஷ்வா வர்க்கத்துக்கு உள்ளேயே இருக்கும் பிளவுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டு வரும்படி நிர்பந்திக்கிறது
இவ்வாறு தன் இங்கிலாந்தில் 10 மணி நேர வேலை நாளுக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
பழைய சமுதாயத்துக்குள் ஏற்படும் மோதல்கள் ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி போக்குக்கு பல வகைகளில் துணை புரிகின்றன
பூர்ஷ்வா வர்க்கம் இதை விடாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தொடக்கத்தில் மேற்குடி வர்க்கத்திற்கு எதிராக
பின்னர் ஊர் பூர்ஷ்வா வர்க்கத்தின் எந்தப் பிரிவுகளின் நலன்கள் தொழில் உற்பத்தியின் வளர்ச்சியுடன் முரண்பட்டுள்ளனவோ அந்த பிரிவுகளுக்கு எதிராக
இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவதற்காக தனக்கு உதவுமாறு பாட்டாளி வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுகிறது
இவ்வாறு அது பாட்டாளி வர்க்கத்தை அரசியல் இயக்கத்துக்குள் தள்ளி விடுகிறது
இவ்வாறு பூர்ஷ்வா வர்க்கமே பாட்டாளி வர்க்கத்திற்கு வேண்டிய கல்விக்கூறுகள் அதாவது தனக்கே எதிரான ஆயுதங்களை வழங்குகிறது
இது தவிர நான் ஏற்கனவே பார்த்ததைப் போல தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக ஆளும் வர்க்கத்தை
சேர்ந்தவர்களில் கணிசமானோர் பாட்டாளி வர்க்கத்திற்குள் தள்ளப்படுகின்றனர்
அல்லது நமது வாழ்க்கை நிலைமைகள் அச்சுறுத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் இவர்களும் கூட பாட்டாளி வர்க்கத்திற்கு பல கல்வி கூறுகளை வழங்குகின்றனர்
இறுதியாக வர்க்க போராட்டம் ஒரு தீர்மானகரமான நேரத்தை நெருங்கும்போது ஆளும் வர்க்கத்துக்குள் பழைய சமுதாயம் முழுவதற்குள்ளும் ஏற்படும் சிதைவு உக்கிரமான வெளிப்படையான தன்மையை அடைவதால் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு துண்டித்துக் கொண்டு அதனிடமிருந்து விலகி எதிர்காலத்தை தனது கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் வர்க்கத்துடன் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்கின்றது
முன்பு பிரபு வர்க்கத்தின் ஒரு பகுதி
பூர்ஷ்வா வர்க்கத்திடம் சேர்ந்தது போல இப்போது பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதி குறிப்பாக ஒட்டுமொத்தமான வரலாற்று இயக்கத்தின் போக்கை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளும் நிலைக்கு தங்களை உயர்த்தி கொண்ட பூர்ஷ்வா கருத்து நிலையாளர்கள் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறார்கள்
தற்காலத்தில் பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் வர்க்கங்களில் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையான புரட்சிகர வர்க்கமாகும்
பெருகித தொழில்நுட்பத்தின் காரணமாக இதர வர்க்கங்கள் அனைத்தும் நசிந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றன
பெருமித தொழில் உற்பத்திக்கே உரிய அதனால் உருவாக்கப்பட்ட அலாதியான விளைபொருள் பாட்டாளி வர்க்கம்தான்
இடைநிலை அடுக்குகள் சிறு தொழில் செய்பவர் சிறு வணிகர் கைவினைஞர் விவசாயி இவர்கள் அனைவருமே இடைநிலை அடுக்குகளாக தாம் இருக்கும் நிலை அறிவுக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக
பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள்
எனவே அவர்கள் புரட்சிகரமானவர்கள் அல்ல அவர்கள் பழமைவாதிகள் அது மட்டுமல்ல அவர்கள் பிற்போக்காளர்கள்
ஏனெனில் அவர்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னோக்கி திருப்புகிறார்கள்
அவர்கள் எப்போதேனும் புரட்சிகரமானவர்களாக இருப்பின் அதற்கு காரணம் எந்த நேரத்திலும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படக்கூடும் என்பதுதான்
அவர்கள் தங்களது நிகழ்கால நலன்களை அல்ல எதிர்கால நலன்களை பாதுகாக்கிறார்கள்
எனவே அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தை ஏற்கும் பொருட்டு தங்கள் கண்ணோட்டத்தை கைவிடுகிறார்கள்
பழைய சமுதாயத்தின் மிகக் கீழ் அடுக்குகளில் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் உதிரி பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க புரட்சியின் காரணமாக சிற்சில இடங்களில் சமுதாய இயக்கத்திற்குள் அடித்து இழுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது
தனது வாழ்க்கை நிலமை முழுவதற்கும் ஏற்ப அது பிற்போக்கு சூழ்ச்சிகளுக்கு விலை போக இசைவளித்து அதற்காகவே மேலும் தயாராக இருக்கும்
பாட்டாளி வர்க்கத்துக்கே உரிய வாழ்க்கை நிலைமைகள் தோன்றி விட்ட நிலையில் பழைய சமுதாய வாழ்க்கை நிலைமைகள் ஏறக்குறைய பயனற்றதாகி விடுகின்றன
பாட்டாளிக்கு சொத்து ஏதுமில்லை
அவனுக்கும் அவனது மனைவி மக்களுக்கும் உ ள்ள உறவுக்கும்
பூர்ஷ்வா குடும்ப உறவுகளுக்கும் இப்போது பொதுவானது ஏதுமில்லை
பிரான்சில் இருப்பதை போலவே இங்கிலாந்திலும்
ஜெர்மனியில் இருப்பதை போலவே அமெரிக்காவிலும்
உள்ள
நவீன தொழில் உற்பத்தி உழைப்பு மூலதனத்துக்கு கீழ்ப்பட்டி இருக்கும் நவீன அடிமை நிலை
அவனிடமிருந்து தேசியத்தன்மை அனைத்தையும் கலைந்து எறிந்து விட்டது
அவனைப் பொருத்தவரை சட்டங்கள் ஒழுக்க நெறிகள் மதம் ஆகியன எல்லாமே தமக்குள்ளே
பூர்ஷ்வா நலன்களை மூடி மறைத்துள்ள பூர்ஷ்வா ஒரு சார்பு கருத்துகளே
அதிகாரத்தை கைப்பற்றிய முந்தைய வர்க்கங்கள் அனைத்தும் வாழ்க்கையில் தான் பெற்ற உயர்நிலையை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு எந்த நிலைமைகளின் கீழ் அவை அதை பெற்றெனவோ அவற்றுக்குச் சமுதாயம் முழுவதையும் கீழ் அடங்கச் செய்ய முற்பட்டன
ஆனால் தங்களது முந்தைய தன்மையுமாக்கள் முறையை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் அதன் மூலம் இதுவரை நிலவி வந்த தன்மையுமாக்கள் முறையை ஒழித்துக் கட்டுவதன் மூலமே பாட்டாளிகளால் சமூக உற்பத்தி சக்திகளை வென்றெடுக்க முடியும்
பாதுகாக்கப்பட வேண்டியது ஏதும் பாட்டாளிகளுக்கு இல்லை அவர்கள் அழிக்க வேண்டியது இதுவரை நிலவி வந்துள்ள தனியாருக்கான பாதுகாப்பு ஒவ்வொன்றையும் தனியாருக்கான உத்தரவாதம் ஒவ்வொன்றையும்தான்
இதற்கு முந்தைய இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையினரின் நலன்களுக்காக சிறுபான்மையினரால் நடத்தப்பட்ட இயக்கங்கள்
பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேச்சையான இயக்கம்
தற்கால சமுதாயத்தின் மிக அடிமட்ட அடுக்கான பாட்டாளி வருஷம் அதிகாரப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் அடுக்குகளின் மேல் கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறியாமல் தன்னை எழுந்து நிற்கச் செய்யவோ நிமிர்ந்து நிற்கச் செய்யவோ முடியாது
பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் தொடக்கத்தில் உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் வடிவத்தில் குறைந்தபட்சம் தேசிய வடிவிலானதாக உள்ளது
ஆகவே இயல்பாகவே ஒவ்வொரு தேசத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது சொந்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆகிறது
பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை சுருக்கமாக எடுத்துரைப்பதில்
நாங்கள் இப்போது நிலவுகின்ற சமுதாயத்துக்குள்ளே திரைமறைவாக நடந்து வரும் உள்நாட்டு போரில் இருந்து தொடங்கி அது பகிரங்கமான புரட்சியாக மூண்டு பூர்ஷ்வா வர்க்கத்தை பலவந்தமாக தூக்கி எறிவதன் மூலம் பாட்டாளி வர்க்கம் தனது ஆட்சியை நிறுவும் கட்டம் வரை சென்றுள்ளோம்
இதுவரை நாம் பார்த்தது போல் ஒவ்வொரு சமுதாயமும் ஒடுக்கு மர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்குமான முரண்பாட்டை அடித்தளமாகக் கொண்டிருந்தது
ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்கு ஆற்றல் இருக்க வேண்டுமானால் ஒடுக்கப்படும் தர்க்கம் குறைந்தபட்சம் அதனுடைய அடிமை வாழ்வையாவது நடத்திச் செல்வதற்கான நிலைமைகளை உத்திரவாதம் செய்ய வேண்டும்
பண்ணை அடிமை அமைப்பில் பண்ணையடிமையால் கம்யூனின் உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொள்ள முடிந்தது
அதேபோல
நிலப் பிரபுத்துவ வரம்பில்லா முடியாட்சியின் நுகத்தடியின் கீழ் குட்டி பூர்ஷ்வாவால் பூர்ஷ்வாவாக தன்னை உயர்த்திக் கொள்ள முடிந்தது
இதற்கு மாறாக
நவீன தொழிலாளியோ
தொழில் உற்பத்தியின் முன்னேற்றத்தின் காரணமாக உயர்வடைவதற்கு பதிலாக தனது சொந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளுக்கும் கீழ் மேன்மேலும் தாழ்வுறுகிறான்
தொழிலாளி வக்கற்றவனாகின்றான்
மக்கள் தொகையையும் செல்வத்தையும் காட்டிலும் வக்கற்ற நிலை முன்னை காட்டிலும் மிக வேகமாக அதிகரிக்கிறது
பூர்ஷ்வா வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்க்கமாக இருக்கவும் தனது சொந்த வாழ்க்கை நிலைமைகளை சமுதாயத்தை கட்டுப்படுத்தும் சட்டமாக அதன் மீது திணிக்கவும் ஆற்றல் அற்றதாகிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது
அடிமைக்கு அவனது அடிமை நிலைக்குள்ளையே கூட வாழ்வாதாரத்தை உத்திரவாதம் செய்யும் ஆற்றல் அற்றதாக ஆகிவிட்டதால் அது ஆளும் ஆற்றலை இழந்து விடுகிறது
சமுதாயத்தால் இனி மேலும் அதன் கீழ் வாழ முடியாது
அதாவது அது நிலவுவது சமுதாயத்துக்கு இனி ஒவ்வாததாகிவிட்டது
தனிநபர்களின் கைகளில் செல்வம் திரளுவது
மூலதனம் உருவாகும் பெருகுவதும்
பூர்ஷ்வா வர்க்கம் நிலவுவதற்கும் அதன் ஆட்சிக்கும் மிக இன்றியமையாத முன்நிபந்தனையாகும்
மூலதனத்துக்கான முன் நிபந்தனை கூலி உழைப்பு
தொழிலாளர்கள் இடையே நிலவும் போட்டியையே கூலி உழைப்பு தனது பிரத்தியேகமான அடித்தளமாக கொள்கிறது
பூர்ஷ்வா வர்க்கத்தின்விருப்பு வெறுப்புக்கு இடம் இன்றியும் தடுக்க முடியாத படியும் ஊக்குவிக்கப்படும் தொழில் உற்பத்தியின் முன்னேற்றம்
தொழிலாளர்கள் இடையே உள்ள போட்டியின் காரணமாக
அவர்கள் தனிமைப்பட்டுள்ள நிலையை நீக்கி
அதற்கு பதிலாக சங்கத்தின் மூலம் அவர்களது புரட்சிகர ஒற்றுமையை கொண்டு வருகிறது
ஆகவே
பெருமித தொழிலின் வளர்ச்சியுடன்
பூர்ஷ்வா வர்க்கம் உற்பத்தி பொருள்களை உற்பத்தி செய்வதற்கும்
அவற்றை தன்மையும் ஆக்குவதற்குமான அடித்தளமே அசைக்கப்படுகிறது
பொதுவாக பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள உறவு என்ன ?.
பிற தொழிலாளர் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள் தனிவகை கட்சி அல்ல
ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனி நலன்கள் அவர்களுக்கு இல்லை
பாட்டாளி வருகை இயக்கத்தை வடிவமைத்து வளர்த்திருக்க சிறப்பு வகை கோட்பாடுகள் எதையும் அவர்கள் விதிப்பதில்லை
பிற தொழிலாளி வர்க்க கட்சிகளிடம் இருந்து கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்தி காட்டுப்பவை பின் வருபவை மட்டுமே
1 விவேலு நாடுகளில் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வருக்கம் முழுவதற்கும் உள்ள பொது நலன்களை சுட்டிக்காட்டி அவற்றை முன்னிலைப்படுத்துகிறார்கள்
2 பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் மன போராட்டம் கடந்து செல்ல வேண்டிய வெவ்வேறு வளர்ச்சி கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் இயக்கம் முழுவதற்குமான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்
ஆக நடைமுறையின் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் கட்சிகளின் மிக உறுதியான எப்போதும் முன்னேறி செல்கின்ற பிரிவாக அமைகிறார்கள்
தத்துவ ரீதியாக அவர்கள்தான் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு இருக்கின்ற முன்நிபந்தனைகளாக இருக்கிறார்கள்
கம்யூனிஸ்டுகளில் வளர்ச்சி போக்கு
அந்த இயக்கத்தின்
பொது விளைவுகள்
ஆகியன பற்றிய புரிதலில்
பாட்டாளி வர்க்கத் திரளின்
ஏனைய பெரும்பாலான பகுதிகளை விட முன்னேறியவர்களாக இருக்கிறார்கள்
பிற அனைத்து பாட்டாளி வர்க்க கட்சிகளின் உடனடி குறிக்கோள் எதுவோ அதுதான் கம்யூனிஸ்களின்
உடனடி குறிக்கோளும் ஆகும்
பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக உருக்கொள்ளச் செய்வதும்
பூர்ஷ்வா ஆட்சியை தூக்கி எறிவதும்
பாட்டாளி வர்க்கம் தமக்கான
அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதும்தான்
கம்யூனிஸ்களின் தத்துவார்த்த கூறுகள்
உலகை புத்தமைக்க நினைக்கும் ஏதோ ஒரு நிவாரணி விற்பனையாளரால் புனைந்து உருவாக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு கூறப்பட்ட கருத்துக்களையோ கோட்பாடுகளையோ எவ்வகையிலும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல
இக்கூறுகள் இப்போது நிலவுகின்ற ஒரு வர்க்கப் போராட்டத்தில் இருந்து நம் கண் எதிரே நடைபெற்று வரும் ஒரு வரலாற்று இயக்கத்தின் போக்கில் இருந்து எழும் யதார்த்தமான உறவுகளையே பொதுப்பட வெளிப்படுகின்றன
நடப்பில் உள்ள சொத்துரிமை உறவுகளை ஒழிப்பது எவ்வகையிலும் கம்யூனிசத்திற்கு மட்டுமே உரிய தனி சிறப்பு அல்ல
வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக சொத்து உறவுகள் யாவும் தொடர்ந்து வரலாற்று ரீதியான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன
பிரெஞ்சுப் புரட்சி பூர்ஷ்வா சொத்துக்கு ஆதரவாக நில பிரபுத்துவ சொத்தை ஒழித்துக் கட்டியது
கம்யூனிசத்தின் சிறப்பு இயல்பு புதுப்பட சொத்தை ஒழிப்பது அல்ல
மாறாக பூர்ஷ்வா சொத்தை ஒழிப்பதுதான்
ஆனால் பூர்ஷ்வா சொத்து
வர்க்க பகைமைகளின் அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்து அவற்றின் தன்வயம் ஆக்கும் முறையின் ஒரு சிலரால் பலர் சுரண்டப்படும் முறையின் இறுதியான பெரிதும் முழுமை பெற்ற வெளிப்பாடு ஆகும்
இந்தப் பொருளில் கம்யூனிஸ்களின் தத்துவத்தை ஒற்றைச் சொற்றொடரில் தொகுத்து கூற முடியும்
அது
தனிச்சொத்தை ஒழித்தல்
கடின உழைப்பின் மூலம்
தனிப்பட்ட முறையில் ஒருவரால் பெறப்பட்ட சொத்தை தனிநபர் சுதந்திரம் செயல்பாடு சுயேச்சை தன்மை ஆகிய அனைத்திற்கும் அடித்தளமாக அமைவதாக சொல்லப்படும் சொத்தை உடைத்துக் கட்ட விரும்புவதாக கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது
அரும்பாடுபட்டு சேர்த்த சுயமாக அறியப்பெற்ற சுயமாக சம்பாதித்து சொத்தாம் இது !
நீங்கள் சொல்வது பூர்ஷ்வா சொத்துக்கு முன்பு இருந்த குட்டி பூர்ஷ்வா சொத்தா?
சிறு விவசாயி சொத்தா?
நாங்கள் அதை ஒழிக்க வேண்டிய அவசியமே இல்லை
தொழில் உற்பத்தியின் வளர்ச்சி அதை ஒழித்து விட்டது
தினந்தோறும் அதை ஒழித்து வருகின்றது
அல்லது நவீன பூர்ஷ்வா தனிச்சொத்தை பற்றி பேசுகிறீர்களோ?
ஆனால்
கூலி உழைப்பு
பாட்டாளியின் உழைப்பு
அவனுக்கு
சொத்தை படைக்கிறதா?
இல்லவே இல்லை
அது உருவாக்குவது மூலதனத்தை
முதலாளியாக இருப்பது
என்பதன் பொருள்
உற்பத்தியில் ஒருவர்
வெறும் தனிப்பட்ட அந்தஸ்தை மட்டுமல்ல
சமூக அந்தஸ்தையும் வகிப்பதாகும்
மூலதனம் என்பது கூட்டு செயல்பாட்டின் விளைவு
பல உறுப்பினர்களின் கூட்டு செயல்பாட்டின் மூலமாக மட்டுமே
உண்மையில் இறுதியாக பார்க்கையில்
சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் கூட்டு செயல்பாட்டின் மூலமாக மட்டுமே அதனை இயங்க வைக்க முடியும்
எனவே
மூலதனம் என்பது
தனிநபர் சக்தி அல்ல
அது ஒரு சமூக சக்தி
ஆகவே
மூலதனம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய
பொதுச் சொத்தாக மாற்றப்படும்போது
தனிநபரின் சொத்து
சமுதாய சொத்தாக மாற்றப்படுவதில்லை
சொத்தின் சமூகத்தன்மைதான் மாற்றப்படுகிறது
அது தனது வர்க்கத் தன்மையை இழக்கிறது
கூலி உழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்ச கூலி
அதாவது தொழிலாளி தொழிலாளியாக உயிர் வாழ்வதை பராமரிப்பதற்கு அவசியமான பிழைப்பு சாதனங்களின் அளவு
ஆகவே
கூலி தொழிலாளி
தனது உழைப்பின் மூலம் தன்வயமாக்கிக் கொள்வதெல்லாம் அவரது வெறும் உயிர் வாழ்வை மறு உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது
உயிர் வாழ்வை மறு உற்பத்தி செய்வதன் பொருட்டு
உழைப்பின் உற்பத்தி பொருள்களை தன்வயமாக்குதலை
இன்னொருவரது உழைப்பின் மீதான அதிகாரத்தை வழங்கும் நிகர உபரி எதனையும் விட்டு வைக்காத தனிப்பட்ட தன்வயமாக்களை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு சிறிதும் இல்லை
மூலதனத்தை பெருகச் செய்வதற்கு மட்டுமே தொழிலாளியை வாழ செய்கிற ...
ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளியை வாழ செய்கிற ...
இந்தத் தன்வயமாக்களின் இழிவான தன்மையைத்தான் நாங்கள் ஒழிக்க விரும்புகிறோம்
பூர்ஷ்வா சமுதாயத்தில்
உயிருள்ள உழைப்பு
திரட்டப்பட்ட உழைப்பை (மூலதனம்)
பெருகச் செய்வதற்கான
சாதனம் மட்டுமே
கம்யூனிச சமுதாயத்தில் திரட்டப்பட்ட உழைப்பு தொழிலாளியின் வாழ்க்கை முறையை
விரிவுபடுத்தி
செழுமைப்படுத்தி
மேம்படுத்தும்
சாதனமாகவே இருக்கும்
ஆகவே,
பூர்ஷ்வா சமுதாயத்தில்
கடந்த காலம் (மூலதனம்)
நிகழ் காலத்தின் மீது (பாட்டாளி வர்க்கம்)
ஆதிக்கம் செலுத்துகிறது
கம்யூனிச சமுதாயத்திலோ
நிகழ்காலம் (பாட்டாளி வர்க்கம்) கடந்த காலத்தின் (மூலதனம்) மீது ஆதிக்கம் செலுத்தும்
பூர்ஷ்வா சமுதாயத்தில்
மூலதனம் சுயேச்சையானதாகவும் தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது
உயிருள்ள தனிநபரோ மூலதனத்தைச் சார்ந்தவராகவும் தனித்துவம் நீங்க பெற்றவராகவும் இருக்கின்றார்
இந்த நிலைமைகளை ஒழிப்பதை தான் தனித்துவத்தின் சுதந்திரத்தின் ஒழிப்பு என பூர்ஷ்வா வர்க்கம் கூறுகிறது
அப்படியேதான்
பூர்ஷ்வா தனித்துவத்தையும்
பூர்ஷ்வா சுயேச்சை தன்மையையும்
பூர்ஷ்வா சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் குறிக்கோள்
தற்போதைய பூர்ஷ்வா உற்பத்தி உறவுகளின் கீழ்
சுதந்திரம் என்பதற்கு
சுதந்திரமான வணிகம் சுதந்திரமான விற்றலும் வாங்குதலும் என்றே பொருள்
ஆனால்
விற்றனும் வாங்குதலும்
மறையும்போது சுதந்திரமான விற்றனும் வாங்குதலும் கூட மறைந்துதான் போகும்
சுதந்திரம் பற்றிய நமது
பூர்ஷ்வா வர்க்கத்தின்
பிற வாய் வீச்சுகள்
அனைத்தையும் போலவே
சுதந்திரமான வெற்றிலையும் வாங்குதலையும் பற்றிய இந்த பேச்சுக்கும் பொதுவாக ஒரு அர்த்தம் இருக்கும் என்றால்
அது மத்திய காலத்து வரம்புக்கு உட்பட்டிருந்த வற்றலுடன் வாங்குதலுடன் கட்டுண்ட வணிகர்களுடனும் ஒப்பிடும் அளவுக்குத்தானே அன்றி
முற்றிலும் வாங்குதலும் பூர்ஸ்வா பொருள் உற்பத்தி உறவுகளும்
பூர்ஷ்வா வர்க்கமும்கூட கம்யூனிசத்தால் ஒழிக்கப்படுவதுடன் ஒப்பிடுகையில் அது அர்த்தம் இழந்து போகின்றது
தனிச்சொத்தை ஒழிக்க
நாங்கள் விரும்புகிறோம் என்பதால்
நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள்
ஆனால்
தற்போது உள்ள உங்கள் சமுதாயத்தில்
பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச்சொத்து ஏற்கனவே இல்லாமல் ஆகிவிடப்பட்டுள்ளது
ஒரு சிலருக்கு மட்டுமே தனிச்சொத்து இருப்பதற்கு காரணம்
பத்தில் ஒன்பது பங்கினர் கைகளில் அது இல்லாது போனதுதான்
சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையினரிடம்
எந்தச் சொத்து இல்லாததையே முன்நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை
நாங்கள் ஒழிக்க விரும்புவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்
சுருங்க கூறின்
உங்களது சொத்தை
ஒழிக்க விரும்புவதாக
எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்
சரியாகத்தான் சொல்கிறீர்கள்
நாங்கள் செய்ய விரும்புவதும் அதுதான்
எப்போது உழைப்பை
மூலதனமாக பணமாக
நில வாடகையாக அதாவது ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு சமூக சக்தியாக மாற்ற முடியாமல் போகின்றதோ...
எப்போது தனிநபரின் சொத்தை
பூர்ஷ்வா சொத்தாக மூலதனமாக மாற்ற முடியாமல் போகின்றதோ...
அப்போதே தனித்துவம் மறைந்து விடுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்
ஆகவே தனிநபர் என்று நீங்கள் கூறுவது
பூர்ஷ்வாவை
பூர்ஷ்வா சொத்துரிமையாளரை தவிர வேறல்லர் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டே தீர வேண்டும்
உண்மையில் இந்த தனிநபரை வழக்கொழிந்து போகத்தான் செய்ய வேண்டும்
சமுதாய உற்பத்தி பொருள்களை தன்வயம் ஆக்கிக் கொள்ளும் ஆற்றலை கம்யூனிசம் எவரிடமிருந்தும் பறிக்கவில்லை
உற்பத்தி பொருள்களை தன்வயம் ஆக்கிக் கொள்வதன் மூலம் பிறரது உழைப்பை அடிமைப்படுத்தும் ஆற்றலைதான் அவரிடம் இருந்து பறிக்கிறது
தனிச்சொத்து ஒடிந்ததும் எல்லா செயல்பாடுகளும் நின்று போய்விடும்
உலகளாவிய சோம்பேறித்தனம் பரவும் என்றும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது
அப்படியானால்
பூர்ஷ்வா சமுதாயம் நீண்ட காலத்துக்கு முன்பே முழு சோம்பேறித்தனத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்
ஏனெனில்
அதில் உழைப்போர் எதையும் சேர்ப்பதில்லை
சேர்ப்பவர்கள் உழைப்பதில்லை
மூலதனம் இல்லாமல் போன உடனேயே
கூலி உழைப்பும் இல்லாமல் போகும் என்பதை
திரும்பத் திரும்ப
பலவிதமாக சொல்வதுதான் இக்கூற்றின் பொருள்
கம்யூனிசம் முறையில் பொருளாதார படைப்புகளை உற்பத்தி செய்வதற்கும்
அவற்றை தன்வயம் ஆக்குவதற்கும் எதிராக சொல்லப்படும் மறுப்புரைகள்
அறிவுத்துறை படைப்புகள்
உற்பத்தி செய்யப்படுவதற்கும் தன்வயம் ஆக்குவதற்கும் விரிவுபடுத்தப்படுகின்றன
எப்படி வர்க்கச் சொத்தில் முடிவு பூர்ஷ்வாவைப் பொறுத்தவரை
பொருள் உற்பத்தியில் முடிவாகவே
இருக்கிறதோ அதேபோல
வர்க்க கலாச்சாரத்தின் முடிவு
அவரைப் பொறுத்தவரை பொதுவாக கலாச்சாரத்தின் முடிவை ஒத்ததாகவே இருக்கின்றது
அழிந்து விடும் என அவர் புலம்பும் அந்த கலாச்சாரம்
மிகப் பெரும்பான்மையான மக்களை பொருத்தவரை அவர்களை இயந்திரங்களாக பயிற்றுவிப்பதே
ஆனால்
பூர்ஷ்வா சொத்தின் ஒழிப்பை சுதந்திரம் கலாச்சாரம் நீதி முதலியன பற்றிய
உங்கள் பூர்ஷ்வா கருத்துகளுக்கு பொருந்தும் வகையில்
மதிப்பீடு செய்து கொண்டு எங்களுடன் சண்டைக்கு வராதீர்கள்
உங்கள் நீதியானது
சட்டம் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள
உங்கள் வர்க்கத்தின்
சித்தம் மட்டுமே
உங்கள் சித்தத்தின் உள்ளடக்கத்தை வரையறுப்பது உங்கள் வர்க்கம் நிலவுவதற்கான பொருளாதார நிலைமைகள்தான்
அதேபோல
உங்களுடைய கருத்துகளுமே
பூர்ஷ்வா உற்பத்தி உறவுகள்
பூர்ஷ்வா சொத்து ஆகியவற்றின் விளைபொருள்களே
சமூகப் பொருள் உற்பத்தியின்
வளர்ச்சி போக்கில் வந்து செல்லும் வரலாற்று ரீதியான உறவுகளில் இருந்து தோன்றும்
உங்களது உற்பத்தி உறவுகளும் சொத்தும் சாசுவதமான
இயற்கை விதிகளாகவும்
அறிவின் விதிகளாகவும்
உங்களது சுயநல கருத்தை கொண்டு மாற்றப்படுகின்றன
இந்தக் கருத்து உங்களுக்கும் மறைந்து ஒழிந்த எல்லா
ஆளும் வர்க்கங்களுக்கும் பொதுவானது
பண்டைக்கால கிரேக்க ரோமானிய சமுதாயங்களில் இருந்த
சொத்து தொடர்பாக
நில பிரபுத்துவ சொத்து தொடர்பாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்களா அதை
பூர்ஷ்வா சொத்து தொடர்பாக பார்க்க உங்களை நீங்கள் அனுமதிப்பதில்லை
குடும்பத்தை ஒழித்தல்!
கம்யூனிஸ்களில் இந்த வெட்கக்கேடான நோக்கம் மிக தீவிரமானவர்களுக்கும் கூட சினமூட்டுகிறது
தற்கால குடும்பத்துக்கு
பூர்ஷ்வா குடும்பத்துக்கு அடிப்படையாக இருப்பது எது?
மூலதனம்தான்.
தனியாரின் லாபம் தான்.
முழு வளர்ச்சியடைந்த இந்த குடும்பம் பூர்ஷ்வாக்களுக்கு மட்டுமே இருக்கின்றது
ஆனால்
இந்த நிலையை
பாட்டாளிகளின் வலுக்கட்டாயமான குடும்ப நிலையும்
பொது விபச்சாரமும் முழுமைப்படுத்துகின்றன
பூர்ஷ்வா குடும்பத்தை முழுமைப்படுத்துவது
மறைந்து போகும்போது
கூடவே பூர்ஷ்வா குடும்பமும் இயல்பாகவே மறைந்துவிடும்
மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்து விடும்
குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் சுரண்டுவதை நிறுத்த விரும்புகிறோம் என்று எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்களா?
நாங்கள் இந்த குற்றத்தை புரிந்தவர்கள் என்று ஒப்புக் கொள்கிறோம்
ஆனால்
நாங்கள் வீட்டுக் கேள்விக்கு பதிலாக சமூகமுறை கல்வியை கொண்டு வருவதன் மூலம் மிக நெருக்கமான உறவுகளை நாசமாக்குவதாக நீங்கள் கூறுகிறீர்கள்
உங்களுடைய கல்வியும் கூட நீங்கள் கல்வி போதிக்கும் சமுதாய நிலைமைகளால்
சமுதாயத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டின் மூலமாக
பள்ளிக்கூடங்கள் முதலியவற்றின் மூலம் சமுதாயத்தால் தீர்மானிக்கப்படவில்லையா?
கல்வியின் மீது சமுதாயம் ஏற்படுத்தும் தாக்கத்தை கம்யூனிஸ்டுகள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை
அவர்கள் அதனுடைய தன்மையை மாற்ற மட்டுமே செய்கிறார்கள்
ஓர் ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்து
கல்வியை விடுவிக்கிறார்கள்
பெருமித தொழில் உற்பத்தியின் விளைவாக பாட்டாளிகள் அனைத்துக் குடும்ப உறவுகளும் மேன்மேலும் துண்டிக்கப்பட்டு
குழந்தைகள் சாதாரண வணிகப் பொருள்களாகவும் உழைப்பு கருவிகளாகவும் மாற்றப்படுவதால்
குடும்பம் கல்வி பற்றிய பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள நெருக்கமான உறவுகள் பற்றிய
பூர்ஷ்வாப் பேச்சுகள் எல்லாம் மென்மேலும் அருவருக்கத் தக்கதாகி விடுகின்றன
ஆனால் கம்யூனிஸ்களாகிய நீங்கள் பெண்களை எல்லோரும் பொதுவாக அனுபவிக்க செய்து விடுகிறீர்கள் என்று பூர்ஷ்வா வருத்தம் முழுவதும் உங்களைப் பார்த்து ஒரே குரலில் கூச்சலிடுகின்றது
பூர்ஷ்வா தனது மனைவியை வெறும் உற்பத்தி கருவியாகவே பார்க்கிறார்
உற்பத்தி கருவிகள் எல்லோருக்கும் பொதுவானவையாக பயன்படுத்தப்பட போவதாக கேள்விப்படும் அவர் இதே போல எல்லோருக்கும் பொதுவாகிவிடும் கதிதான் பெண்களுக்கும் ஏற்பட போகிறது என்று இயல்பாகவே முடிவு செய்து விடுகிறார்
பெண்கள் வெறும் உற்பத்தி கருவிகளாக இருக்கும் நிலையை வழக்கற்றதாக செய்வதுதான் பிரச்சனை என்பதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை
எப்படி இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக பெண்களை எல்லோரும் பொதுவாக அனுபவிக்க செய்யப் போகிறார்கள் என சொல்லப்படுவதை கேட்டு பூர்ஷ்வாக்கள் பெரும் முழுக்க சீலர்களாக வெளிப்படுத்தும் பேரச்சத்தை காட்டிலும் நகைக்கத்தக்கது வேறு ஏதும் இல்லை
பெண்களை எல்லோரும் அனுபவிப்பதைக் கொண்டு வரும் தேவை கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை
அது அனேகமாக எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது
நமது பூர்ஷ்வாக்கள் சட்டபூர்வமான விபச்சாரத்தை நாடுவதை பற்றி சொல்லவே வேண்டாம்
பூர்ஷ்வாக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாட்டாளிகளின் மனைவியர் பெண் மக்கள் ஆகியோரை வைத்துக் கொள்வதுடன் நிற்காமல்
தமக்குள் ஒருவர் மனைவியை இன்னொருவர் வசப்படுத்தி அனுபவிப்பதில் பேரின்பம் காண்கிறார்கள்
பூர்ஷ்வா திருமணம் என்பது உண்மையில் மனைவியரை பொதுவாக அனுபவிக்கும் ஒரு முறைதான்
போலித்தனமாக மூடி மறைக்கப்பட்டுள்ள முறையில் பெண்களை பொதுவாக அனுபவிக்கும் முறைக்கு பதிலாக
கம்யூனிஸ்டுகள் சட்டபூர்வமாகவும் ஒளிவு மறைவு இன்றியும் அதை செய்ய விரும்புகிறார்கள் என்று தான் அவர்கள் மீது அதிகபட்ச குற்றச்சாட்டலாம்
மேலும்
இன்றைய சமூகப் பொருள் உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படும் போது இந்த உறவுகளில் இருந்து எழுந்துள்ள பெண்களை பொதுவாக அனுபவிக்கும் முறையும்
அதாவது சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமற்ற முறையிலான விபச்சாரமும் மறைக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்
தாய் நாட்டை ஒழிக்க விரும்புவதாக
தேசிய இனத்தை ஒழிக்க விரும்புவதாக
கம்யூனிஸ்டுகள் மீது இன்னொரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது
தொழிலாளர்களுக்கு தாய்நாடு ஏதுமில்லை
அவர்களிடம் இல்லாத ஒன்றை யாரும் பறிக்க முடியாது
பாட்டாளி வர்க்கம் முதலில் அரசியல் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும்
தேசிய வர்க்கமாக தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்
தன்னையே தேசமாக அமைத்துக் கொள்ள வேண்டும்
அந்த அளவுக்கு அது இன்னும் தேசிய தன்மை கொண்டதாக உள்ளது
ஆனால் ஒருபோதும் பூர்ஷ்வா வர்க்கம் இந்தச் சொல்லுக்கு கொண்டிருக்கும் அர்த்தத்தில் அல்ல
பூர்ஷ்வா வர்க்கத்தின் வளர்ச்சி
வர்த்தக சுதந்திரம்
உலகச் சந்தை
பொருள் உற்பத்தி ஒரே மாதிரியாக ஆதல்
இவற்றுக்குப் பொருத்தமான முறையிலான வாழ்க்கை நிலைமை
ஆகியவற்றுடன் மக்களிடையே உள்ளது தேசிய பிரிவினைகளும் பகைமைகளும் ஏற்கனவே மேன்மேலும் மறைந்து கொண்டிருக்கின்றன
பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி இவற்றை இன்னும் அதிகமாக மறையச் செய்யும்
குறைந்தபட்சம் நாகரிக நாடுகளின் அளவிலாவது ஏற்படும் செயல் ஒற்றுமை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்
தனி ஒருவரை இன்னொருவர் சுரண்டுவது எந்த அளவுக்கு ஒலிக்கப்படுகிறதோ
அந்த அளவுக்கு
ஒரு தேசத்தை இன்னொரு தேசம் சுரண்டுவதும் ஒழிக்கப்படும்
தேசத்திற்குள்
வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையும் அத்துடன்
தேசங்கள் ஒன்றுக்கொன்று கொண்டிருக்கும் பகை மனப்பான்மையும்
முடிவுக்கு வரும்
மதத் தத்துவ கருத்து நிலை கண்ணோட்டங்களில் இருந்து கம்யூனிசத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விரிவான விவாதத்திற்கு தகுதியற்றவை
மக்களின் கருத்தாக்கங்கள் கண்ணோட்டங்கள் கருத்துக்கள் சுருங்கச் சொன்னால்
அவர்களின் உணர்வானது
அவர்களின் வாழ்க்கை நிலைமைகள்
அவர்களின் சமூக உறவுகள்
அவர்களின் சமூக வாழ்க்கை ஆகியவற்றோடு சேர்ந்து மாற்றம் அடைகின்றன என்பதை புரிந்து கொள்ள ஆழமான அறிவு கூர்மை தேவைப்படுகிறதா?
சமூகப் பொருள் உற்பத்தியுடன் சேர்ந்து அறிவுத்துறை உற்பத்தியும் மறுவார்ப்புக்கு உள்ளாக்கப்படுவதை கருத்துக்களின் வரலாறு காட்டவில்லையா?
ஒரு சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் எப்போதுமே அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தின் உடைய கருத்துக்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றன
சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றும் கருத்துகள் பற்றி மக்கள் பேசுகிறார்களே
அப்படிப் பேசுகையில்
பழைய சமுதாயத்தினுள்
புதிய சமுதாயத்தின் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன
பழைய வாழ்க்கை நிலைமைகள் குலையும் போது
அவற்றோடு சேர்ந்து
பழைய கருத்துக்களும் குலையும் என்னும் உண்மையைத்தானே வெளிப்படுத்துகிறார்கள்
பண்டைய உலகம் தனது கடைசி நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது
பண்டிகை மதங்களை கிறிஸ்தவ மதம் வெற்றி கொண்டது
பதினெட்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத கருத்துகள் அறிவொளி இயக்க கருத்துகளுக்கு அடிபணிந்து விட்டபோது அன்று புரட்சிகரமானதாக இருந்த பூர்ஷ்வா வர்க்கத்துடன்
நில பிரபுத்துவ சமுதாயம் தனது மரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது
மதச் சுதந்திரம்
மனசாட்சி சுதந்திரம் ஆகியன அறிவுலகில் மேலோங்கியிருந்த கட்டற்ற சுதந்திரப் போட்டியின் வெளிப்பாடுகளை
வரலாற்று வளர்ச்சியின் போக்கில் மத ஒழுக்க நெறி தத்துவ அரசியல் சட்ட நெறி கருத்துக்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பதில் சந்தேகம் இல்லை
ஆனால்
மதம் ஒழுக்க நெறி தத்துவம் அரசியல் சட்ட நெறி ஆகியவை இந்தப் பலவகை மாற்றங்களுக்கு இடைவிடாது தாக்குப்பிடித்து தொடர்ந்து நிலவி வந்தன என்றும் கூறப்படலாம்
மேலும்
சமுதாய நிலமைகள் அனைத்துக்கும்
பொதுவான சுதந்திரம் நீதி முதலிய சாசுவத உண்மைகளும் இருக்கின்றன
ஆனால்
சுவாசுவது உண்மைகள் மதம் ஒழுக்க நெறி ஆகியவற்றை கம்யூனிசம் புது வார்ப்பு செய்தெடுப்பதற்கு பதிலாக அவற்றை ஒழிக்கின்றது
இது இன்று வரையிலான வரலாற்று வளர்ச்சி அனைத்துக்கும் முரணானதாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது
இந்தக் குற்றச்சாட்டில் இருந்து பெறப்படுவது என்ன?
சமுதாயம் அனைத்தின் வரலாறும் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை கொண்டிருந்த வர்க்கப் பகைமைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதுதான்
ஆனால்
இந்த வர்க்க பகைமைகள்
எந்த வடிவத்தை எடுத்திருந்தாலும்
சமுதாயத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை
சுரண்டி வந்தது
கடந்த நூற்றாண்டுகள் அனைத்துக்கும் பொதுவான உண்மையாகும்
ஆகவே
அனைத்து நூற்றாண்டுகளின் சமூக உணர்வு பல்வேறுபட்டதாகவும்
பல வகைப்பட்டதாகவும்
இருந்த போதிலும்
அது எல்லாச் சகாப்தங்களுக்கும் குறிப்பிட்ட பொதுவான வடிவங்களில்
உணர்வு வடிவங்களின்
இயங்கி வந்திருக்கிறது
என்பதில் வியப்பில்லை
வருத்தப்பகைமைகள்
முழுமையாக மறையும் போதுதான் இந்த பொது வடிவங்களும் முற்றிலுமாக மறைந்தொழியும்
கம்யூனிசப் புரட்சி என்பது
மரபு வழி சொத்து உறவுகளில் இருந்து ஏற்படுத்திக் கொள்ளும் மிக முற்போக்கான முறிவு ஆகும்
தனது வளர்ச்சிப் போக்கில்
அது மரபு வழி கருத்துக்களில் இருந்து
மிகமுற்போக்கான முறிவை ஏற்படுத்திக் கொள்வதில் வியப்பில்லை
எனினும்
பூர்ஷ்வா வர்க்கம்
கம்யூனிசத்திற்கு காட்டும் எதிர்ப்பை
இத்தோடு விட்டுவிடுவோம்
தொழிலாளிகள் நடத்தும் புரட்சியே முதல் படி
பாட்டாளி ஒழுக்கத்தை ஆளும் வர்க்கமாக உயர்த்துவது
ஜனநாயகத்தை வென்றெடுப்பது
என்பதை நாம் ஏற்கனவே மேலே கண்டோம்
பூர்ஷ்வா வர்க்கத்திடம் இருந்து சிறிது சிறிதாக மூலதனம் முழுவதையும் கைப்பற்ற ...
உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் அரசின் கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் மையப்படுத்த ...
உற்பத்தி சக்திகளின்
ஒட்டுமொத்த தொகையை கூடுமான அளவுக்கு
விரைவாக பெருக செய்ய ...
பாட்டாளி வர்க்கம்
தனது அரசியல் ஆட்சியை பயன்படுத்தும்
தொடக்கத்தில்
சொத்து உரிமையிலும்
பூர்ஷ்வா உற்பத்தி உறவுகளிலும்
எதேச்சதிகாரமான முறையில் குறிப்பிட்டுத்தான்
இந்த பணியை
நிறைவேற்ற முடியும்
அதாவது
பொருளாதார ரீதியாக போதாதவையாகவும்
வழக்குறைந்தவையாகவும் தோன்றினாலும்
நடைமுறைப்படுத்தப்படும் போக்கில்
தமது சொந்த வரம்புகளை
தாண்டி செல்பவையாகவும்
உற்பத்தி முறை முழுவதையும் மாற்றியமைக்கும் வழிமுறை என்னும் வகையில் தவிர்க்க முடியாதவையாகவும்
உள்ள நடவடிக்கைகள் மூலமே
இந்தப் பணியை செய்ய முடியும்
இந்த நடவடிக்கைகள் இயல்பாகவே வெவ்வேறு நாடுகளில் சார்ந்து வெவ்வேறானவையாக இருக்கும்
எனினும்
மிகவும் முன்னேறிய நாடுகளில் கீழ் கண்டவற்றை கணிசமான அளவுக்கு பொதுவாக நடைமுறைப்படுத்த முடியும்
1.நிலச் சொத்தை பறிமுதல் செய்து நில வாடகையை அரசு செலவினங்களுக்கு பயன்படுத்துதல்
2. வளர் வீத விகிதத்தில் வரி விதித்தல்
3.சொத்து வாரிசு உரிமையை ஒழித்தல்
4. நாட்டை விட்டு வெளியேறியவர்கள் கலக்கக்காரர்கள் அனைவரது சொத்தையும் பறிமுதல் செய்தல்
5. அரசு மூலதனத்துடனும்
அரசுக்கு மட்டுமே உரிய
ஏகபோக உரிமையுடனும்
ஒரு தேசிய வங்கியை நிறுவி கடன்கள் வழங்குவதை
அந்த வங்கியின் மூலமாக
அரசின் கைகளில் மையப்படுத்துதல்
6. போக்குவரத்து சாதனைகள் முழுவதையும் அரசின் கைகளில் மையப்படுத்துதல்
7.ஒரு பொது திட்டத்திற்கு உகந்தவாறு
தேசிய தொழிற்சாலைகளையும் உற்பத்தி கருவிகளையும் அதிகரித்தல்
நிலத்தை சாகுபடிக்குக் கொண்டு வருதல் அதை மேம்படுத்துதல்
8.உழைப்பை சரிசமமாக எல்லோரும் செய்ய வேண்டிய கடமையாக ஆக்குது.
குறிப்பாக வேளாண்மைக்கு தொழில் உற்பத்தி சேனைகளை நிறுவுவதும்
9.வேளாண்மை தொழில் உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்வதில் ஒன்றிணைந்த செயல்முறைகளும் அவற்றின் மூலம் நகரத்துக்கும் நாட்டுப்புறக்கும் உள்ள முரண் தன்மையை படிப்படியாக ஒழித்து கட்டுதலும்
10.கட்டணம் இன்று எல்லா குழந்தைகளுக்கும் பொதுக் கல்வியை வழங்குதல்
குழந்தைகள் தொழிற்சாலையில் வேலை செய்யும் தற்போதைய வடிவத்தை ஒழித்து கட்டுதல்
கல்வியையும் பொருளாதார உற்பத்தியில் ஒன்றிணைத்தல் இன்னும் பிற...
வளர்ச்சியின் போக்கில்
வர்க்க வேறுபாடுகள் மறைந்து ஒன்றிணைக்கப்பட்ட
தனி நபர்களின் கைகளில் உற்பத்தி முழுவதும் ஒருமுகப்படுத்தப்படும்போது அரசியல் அதிகாரம்
அதன் அரசு தன்மையை இழந்து விடும்
அரசியல் அதிகாரம் என்பதன் சரியான பொருள்
இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக
ஒரு வர்க்கம் வைத்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரமே ஆகும்
எப்போது பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில்
பாட்டாளி வர்க்கம்
தவிர்க்க முடியாதபடி
தன்னை ஒரு வர்க்கமாக ஒன்றிணைத்து
புரட்சியின் மூலமாக
தன்னையே ஒரு ஆளும் வர்க்கமாக ஆக்கிக் கொண்டு
ஆளும் வர்க்கம் என்னும் முறையில் பழைய உற்பத்தி உறவுகளை பலவந்தமாக ஒழிக்கின்றதோ
அப்போது அது
இந்த பழைய சமூகப் பொருள் உற்பத்தி உறவுகளுடன்
கூடவே வர்க்கப் பகைமையும்
பொதுவாக வர்க்கங்களும் நிலவுவதற்குரிய நிலைமைகளை ஒழிப்பதுடன்
ஒரு வர்க்கம் என்னும் முறையில் தான் புரிந்து வரும்
ஆட்சியையுமே ஒழிக்கிறது
வர்க்கங்களையும்
வர்க்க பகைமைகளையும் கொண்டுள்ள பழைய பூர்ஷ்வா சமுதாயத்தின் இடத்தில் ஒவ்வொருவரின்
தங்குதடையற்ற வளர்ச்சியே அனைவரது
தங்குதடையற்ற வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கும்
ஓர் ஒன்றிணைப்பு சங்கம் வரும்
பிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த மேற்குடியினருக்கு வரலாற்று ரீதியான நிலைமைகளின் காரணமாக
நவீன பூர்ஷ்வா சமுதாயத்தை எதிர்த்து பிரசுரங்கள் எழுதும் தேவை ஏற்பட்டது
தங்களால் வெறுக்கப்பட்ட
புதிதாக ஏற்றம் பெற்று விட்டவர்களிடம் இந்த மேற்குடியினர் 1830 ஜூலையில் நடந்த பிரெஞ்சு புரட்சியிலும்
இங்கிலாந்து சீர்திருத்த கிளர்ச்சியிலும்
மீண்டும் தோல்வி அடைந்தனர்
ஒரு தீவிரமான அரசியல் போராட்டத்திற்கு இனி இடம் இல்லாமல் போய்விட்டது
அவர்களுக்கு எஞ்சியதெல்லாம் வெறும் இலக்கியப் போராட்டம்தான்
ஆனால் இலக்கிய துறையிலும் கூட முடியாட்டி மீட்பு பற்றிய பழைய பேச்சுகள் சாத்தியமில்லாமல் போயின
அனுதாபத்தை தட்டி எழுப்புவதற்காக
மேற்கூறியினர் வெளி பார்வைக்கு தமது சொந்த நலன்களை மறந்து
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிரான தமது குற்றச்சாட்டை வாய்ப்பாடாக சொல்ல வேண்டியதாயிற்று
இவ்வாறு நேர்குடியினர் தமது புதிய எஜமானவை தாக்கும் வசை பாடல் பாடயும்
வரப்போகும் அழிவு பற்றிய பீதியூடும் ஆருடங்களை
அவனது காதுகளில் முணுமுணுத்தும்
குறைதீர்த்துக் கொண்டனர்
இப்படித்தான் தோன்றியது
நிலப்பிரபுத்துவ சோசலிசம்
பாதி புலம்பல் பாட்டாகவும்
பாதி வசை பாட்டாகவும்
பாதி கடந்த காலத்தில் எதிரொலியாகவும்
பாதி எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தலாகவும்
கசப்பான கிண்டலான
சுருக்கென்று தைக்கும்படியான விமர்சனத்தின் மூலம்
பூர்ஷ்வா வர்க்கத்தின்
நெஞ்சின் மையத்தையே அவ்வப்போது தாக்குவதாகவும்
ஆனால் நவீன வரலாற்றின் போக்கை புரிந்து கொள்ளும் திறன் இல்லாததால் எப்போதுமே நகைக்கத்தக்க விளைவை உருவாக்குவதுமாக
நிலப்பிரபுத்துவ சோசலிசம் தோன்றியது
மக்களை தன் பின்னால்
அணி திரள செய்யும் பொருட்டு
அவர்கள் தன் கைகளில்
பாட்டாளியின் பிச்சை பையை
ஒரு பாதாகை போல
அசைத்துக் கொண்டு சென்றனர்
ஆனால்
எப்போதெல்லாம் மக்கள்
அவர்கள் பின்னால் சென்றனரோ
அப்போது அவர்களது புட்டத்தில்
பழைய நிலப்பிரபுத்துவ
படைக்கல சின்னங்கள் இருப்பதைக் கண்டு
உரக்க மட்டு மரியாதையின்றி சிரித்து சிதறி ஓடினர்
இந்த நாடகத்தை
மிகச் சிறப்பாக
நிகழ்த்தி காட்டியவர்கள்
பிரெஞ்சு முடியாட்சிவாதிகளில் ஒரு பகுதியினரும்
இளம் இங்கிலாந்தும் ஆவர்
தமது சுரண்டல் முறை
பூர்ஷ்வா வர்க்கத்தின்
சுரண்டல் முறையில் இருந்து மாறுபட்டு இருந்ததை சுட்டிக்காட்டும் நிலபிரபுத்துவவாதிகள்
காலம் கடந்தவை ஆகிவிட்ட முற்றிலும் வேறுவகைபட்ட சூழல்களிலும் நிலமைகளிலும் தான் சுரண்டியதை
இப்போது மறந்து விடுகிறார்கள்
தங்களுடைய ஆட்சியில் நவீன பாட்டாளி வர்க்கம் இருந்ததில்லை என்பதை எடுத்துக்காட்டும் அவர்கள்
தங்களுடைய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவே
நவீன பூர்ஷ்வா வர்க்கம் என்பதை மறந்து விடுகிறார்கள்
எப்படி இருப்பினும் பூர்ஷ்வா வர்க்கத்தின்
ஆட்சியின் கீழ்
பழைய சமுதாய அமைப்பு முழுவதையும் தகர்த்து விடப்போகும் ஒரு வர்க்கம்
வளர்ச்சி அடைகிறது என்பதே
அந்த வர்க்கத்திற்கு எதிரான
இவர்களது முதன்மையான குற்றச்சாட்டாக இருப்பதால் அவர்களால்
தமது விமர்சன பகுப்பாய்வின் பிற்போக்கு தன்மையை
சிறிது கூட மூடிமறைக்க முடிவதில்லை
பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதை விட
ஒரு சிறப்பாற்றல் இவருக்கு உருவாக்குகிறது என்பதற்காகவே
அவர்கள் பூர்ஷ்வா வர்க்கத்தை கடிந்து கொள்கிறார்கள்
ஆகவே
இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான பலவந்த நடவடிக்கைகள் அனைத்திலும் பங்கேற்கிறார்கள்
அன்றாட வாழ்க்கையின் பிரமாதமான கலட்டல் பேச்சுகளை பேசுபவர்களாக இருந்தாலும்
தங்க ஆப்பிள்களை பொறுக்குவதற்கு இறங்கிவந்து
ஆட்டு ரோமம் சர்க்கரை கிழங்குகள் மிகு போதை சாராயம் ஆகியவற்றை கூவி விற்பதற்காக விசுவாசம் அன்பு கௌரவம் ஆகியவற்றை விலை பேசவும் தயாராக இருக்கிறார்கள்
பாதிரி எப்போதுமே நிலப்பிரபுத்துவவாதியுடன் கைகோர்த்து சென்று கொண்டிருந்ததைப் போலவே மதகுரு சோசலிசம் நிலப்பகுத்துவ சோசலிசத்துடன் கைகோர்த்து சென்று கொண்டிருக்கிறது
கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு சோசலிச மேல் பூச்சுப் பூசுவதைவிட எளிதானது ஏதுமில்லை
தனிச்சொத்தையும் அரசையும் கிறிஸ்தவம் தாக்கி பேசவும் செய்ததில்லையா?
அவற்றுக்குப் பதில் ஈகை தானம் தர்மம் பிச்சை எடுத்தல் பிரம்மச்சரியம் புலன் ஒறுத்தல் மடாலய வாழ்க்கை திருச்சபை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு நீதி போதனை செய்யவில்லையா?
மத சோசலிசம் என்பது மேற்குடியினரின் கோபத்தை புனித படுத்தும் புனித தீர்த்தமே அன்றி வேறல்ல
பூர்ஷ்வா வர்க்கத்தால் தூக்கி எறியப்பட்டது நிலப்பிரபுத்துவ மேற்குடி வர்க்கம் மட்டுமல்ல
இந்த வர்க்கம்
இருப்பதற்கான நிலைமைகள் நவீன பூர்ஷ்வா சமுதாயத்தில் மங்கி மறைந்து விட்டன
மத்திய காலத்து நகரத்தாரும்
சிறு விவசாய வர்க்கமும்
நவீன பூர்ஷ்வா வர்க்கத்தின் முன்னோடிகளாவர்
தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் சொற்ப அளவே வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் இந்த வர்க்கம் வளர்ச்சி அடைந்து வரும் பூர்ஷ்வா வர்க்கத்தின் பக்கத்தில் இன்னமும் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது
நவீன நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் ஒரு புதிய குட்டி பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது
இந்த குட்டி பூர்ஷ்வா வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும்
பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பத்துடன்
பூர்ஷ்வா சமுதாயத்தின் துணை உறுப்பாக தன்னை தொடர்ந்து திருத்தி அமைத்துக் கொண்டிருக்கிறது
ஆனால்
இவ்வர்க்கத்தின் உறுப்பினர்கள் போட்டியில் காரணமாக இடைவிடாது பாட்டாளி வருடத்திலும் தள்ளப்படுகின்றனர்
உண்மையில் பெருவீத தொழில் உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக தாங்கள் நவீன சமுதாயத்தின் சுயேச்சையான பகுதி ஒன்றாக இருக்கும் நிலையில் இருந்து முற்றிலுமாக மறைந்து தங்களுக்கு மாற்றீடாக வணிகம் பொருள் உற்பத்தி வேளாண்மை ஆகியவற்றின் தொழிலாளிகளை மேற்பார்வை இடுபவர்களும் கண்காணிகளும் வரக்கூடிய ஒரு காலம் நெருங்கி வருவதை பார்க்கவும் செய்கின்றார்கள்
மக்கள் தொகையில் பாதிப்பு மேற்பட்டோர் விவசாயிகளாக இருக்கும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பூர்ஷ்வா வருத்தத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை ஆதரித்த எழுத்தாளர்கள் பூர்ஷ்வா ஆட்சியை பற்றிய தமது விமர்சனத்திற்கு
குட்டி பூர்ஷ்வா சிறு விவசாயி ஆகியோரின் அளவுகளை பயன்படுத்தி குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் நோக்கு நிலையில் இருந்து தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தது இயல்பானதே
குட்டி பூர்ஷ்வா சோசலிசம்
உருக்கொண்டது இவ்வாறுதான்
இந்த குட்டி பூர்ஷ்வா இலக்கியத்தின் பிரான்சுக்கு மட்டுமின்றி இங்கிலாந்துக்கும் முதன்மையானவராக இருப்பவர் ஸிஸ்மோந்தி
குட்டி பூர்ஷ்வா சோசலிசம்
நவீன சமூகப் பொருள் உற்பத்தி உறவுகளில் உள்ள முரண்பாடுகளை மிக துல்லியமாக பகுப்பாய்வு செய்தது
பொருளாதார வாதிகளின் மாய்மால நியாயவாதங்களை அம்பலப்படுத்தியது
இயந்திரங்கள் மற்றும் உழைப்பு பிரிவினை
மூலதனமும் நில உடமையும் குவிதல்
மிகை உற்பத்தி நெருக்கடிகள் தவிர்க்க முடியாதபடி சிறுநகரத்தாரும் விவசாயிகளும் நாசம் அடைதல்
பொருள் உற்பத்தியில் நடக்கும் அராஜகம்
செல்வத்தை விநியோகிப்பதில் அப்பட்டமாக தெரியும் ஏற்றத்தாழ்வு
தொழில் உற்பத்தியில் தேசங்களுக்கிடையில் நடக்கும் கழுத்தறுப்பு போர்
பழைய சமூக மரபுகளின்
பழைய குடும்ப உறவுகளின் பழைய தேசிய இனங்களின் குலைவு
ஆகியவற்றை மறுக்க முடியாதபடி மெய்ப்பித்துக் காட்டியது
ஆயினும்
இந்த குட்டிபூர்ஷ்வா சோசலிசத்தின் செயலாக்க உள்ளடக்கத்தை பொறுத்தவரை
அது பழைய உற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனையும்
அவற்றின் கூடவே
பழைய சொத்து உறவுகளையும் பழைய சமுதாயத்தையும்
மீண்டும் நிறுவ விரும்புகிறது
அல்லது
நவீன உற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனையையும்
அவற்றால் தகர்க்கப்பட்ட அல்லது தகர்க்கப்பட வேண்டியிருந்த பழைய உற்பத்தி சாதனைகள் பரிவர்த்தனை ஆகியவற்றின் கட்டுக்கோப்புக்குள் மீண்டும்
சிறைப்படுத்த விரும்புகிறது
இரு வகைகளுமே பிற்போக்கானதாகவும் அதே வேளை கற்பனாவாத தன்மை உடையதாகவும் உள்ளன
பொருள் உற்பத்திக்கு
கைவினை சங்க அமைப்பு
வேளாண்மையில் மரபான அதிகார உறவின் அடிப்படையிலான பொருளாதாரம்
இவைதான்
குட்டி பூர்ஷ்வா சோசலிசம்
இறுதி முடிவாக சொல்லும் தீர்வுகள்
இந்தப் போக்கு ஒரு படி மேல்சென்று பரிதாபகரமான சோகத்தில் முடிவுற்றது
ஓர் ஆளும் பூர்ஷ்வா வர்க்கத்தின் நிர்பந்தத்தின் காரணமாகவும்
அதற்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாகவும் தோன்றிய பிரெஞ்சு சோசலிச கம்யூனிஸ இலக்கியம்
ஜெர்மனியில் நில பிரபத்துவ வரம்பற்ற முடியாட்சியை எதிர்த்து பூர்ஷ்வா வர்க்கம் தனது போராட்டத்தை தொடங்கியிருந்த காலகட்டத்தில் தான் கொண்டுவரப்பட்டது
ஜெர்மன் தத்துவவாதிகளும் அரைவேக்காட்டு தத்துவவாதிகளும்
கற்றறிந்த கனவான்களும்
இந்த இலக்கியத்தை ஆவலுடன் கட்டிப்பிடித்துக் கொண்டனர்
ஆனால்
பிரெஞ்சு நாட்டில் இருந்து
இந்த எழுத்துக்கள்
ஜெர்மனிக்குள் புலம்பெயர்ந்து வந்தா அதே வேலை பிரஞ்சு வாழ்க்கை நிலைமைகளும் புலம்பெயர்ந்து வரவில்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்
புதிய பிரெஞ்சு கருத்துக்களை தமது பழைய தத்துவ கண்ணோட்டத்திற்கு
இசைவாக கொண்டு வருவது
அல்லது
இன்னும் சரியாக சொல்வதென்றால்
பிரெஞ்சு கருத்துக்களை தமது தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் தம் வசமாக்கி கொள்வதுதான்
ஜெர்மன் இலக்கியவாணர்களின் ஒரே வேலை
இந்த தம் வசமாக்கல்
கயல்மொழி ஒன்று பொதுவாக எப்படி பிறரால் தம் வசமாக்கிக் கொள்ளப்படுகிறதோ அதே வழியில் மொழிபெயர்ப்பு மூலமாக நடந்தேறியது
பண்டைய புறச்சமய காலச் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த கையெழுத்து சுவடிகளில் மேல் கத்தோலிக்க புனிதர்கள் பற்றிய அபத்தமான கதைகளை மடாலய துறவிகள் எவ்வாறு எழுதினார்கள் என்பதை நாம் அறிவோம்
பிரெஞ்சு உலகியல் இலக்கியத்தை பொருத்தவரை இதற்கு நேர் எதிரானதை ஜெர்மன் இலக்கிய வாணர்கள் செய்தனர்
பிரெஞ்சு மூலத்திற்கு அடியும் தங்கள் தத்துவ அபத்தத்தை எழுதினர்
பண உறவுகள் பற்றிய பிரெஞ்சு விமர்சன பகுப்பாய்வுக்கு அடியில்
மானுட இயல்பின் அந்நியமாதல் என்பதை எழுதினார்கள்
பூர்ஷ்வா அரசு பற்றிய பிரெஞ்சு விமர்சன பகுப்பாய்வுக்கு அடியில்
அருவமான முறையில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதன் ஆட்சியை தூக்கி எறிதல் என்றும் இன்னும் இது போன்றும் எழுதினார்கள்
பிரெஞ்சு பகுப்பாய்வுகளுக்கு அடியில்
அவர்கள் நுழைத்த இடைச்செருகல்களுக்கு செயல்பாட்டின் தத்துவம்
உண்மை சோசலிசம்
ஜெர்மன் சோசலிச விஞ்ஞானம்
சோசலிசத்தின் தத்துவ அடிப்படை
என்னும் பெயர்களை சூட்டினர்
இவ்வாறு பிரெஞ்சு சோசலிச கம்யூனிஸ இலக்கியம் முற்றிலுமாக வலுவிழக்கச் செய்யப்பட்டது
ஜெர்மானியரின் கைகளில் அது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடாக இல்லாமல் போய்விட்டதால்
தான்
பிரெஞ்சு ஒரு பக்க சார்பினை கடந்து வந்து
உண்மையான தேவைகளை அல்லாமல்
உண்மையின் தேவைகளை
பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அல்லாமல்
மானுட சரத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாக
எந்த வருத்தத்தையும் சேராத
எந்த எதார்த்தமும் இல்லாத
தத்துவ ரீதியான அதி கற்பனை என்னும் பனிமூட்டத்தை மட்டுமே சேர்ந்த
பொதுப்படையான மனித குலத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாக
அவர் கருதுகிறார்
தனது அரைகுறையான பாடப் புத்தக கட்டுரைகளை கருத்தார்ந்த உன்னதமான விடயமாக எடுத்துக் கொண்டு சந்தை வணிகன் போல் அவற்றை கூவி விற்று வந்த ஜெர்மன் சோசலிசம்
இந்த செயல்பாட்டுக்கு
உரியதாக கருதப்பட்ட
கலங்கமற்ற தன்மையை படிப்படியாக இழந்து வந்தது
நிலபிரபுத்துவவாதிகளுக்கும் வரம்பிலா முடியாட்சிக்கும்
எதிராக ஜெர்மன் பூர்ஷ்வா வர்க்கம் குறிப்பாக
பிரஷ்ய பூர்ஷ்வா வர்க்கம் நடத்திய போராட்டம்
சுருங்கக்கூடிய தாராளவாத இயக்கம் மேலும் தீவிரமடைந்தது
எந்த பிரெஞ்சு விமர்சன பகுப்பாய்வின் அற்பத்தனமான எதிரொலியாக ஜெர்மன் சோசலிசம் இருந்ததோ அந்த விமர்சன பகுப்பாய்வு நவீன பூர்ஷ்வா சமுதாயமும் அதற்கு இணை பொருத்தமான பொருளாதார வாழ்க்கை நிலைமைகளும் அதற்கு ஏற்ற அரசியல் அமைப்பு நிலவுவதை முன் நிபந்தனைகளாக கொண்டிருந்தது
ஜெர்மனியின் இப்போதுள்ள பிரச்சினை இந்த முன் நிபந்தனைகளை அடைவதுதான் என்பதை ஜெர்மன் சோசலிசம் வசதியாக மறந்து விட்டது
மாதிரிகள் பள்ளி ஆசிரியர்கள் பெருநிலவுடைமை பட்டிக்காட்டார்கள் அதிகாரிகள் ஆகிய பரிவாரங்களை கொண்ட ஜெர்மனிய வரம்பற்ற அதிகார அரசாங்கங்களுக்கு தம்மை அச்சுறுத்தி வந்த வளர்ச்சியுறும் பூர்ஷ்வா வர்க்கத்தை மிரட்டுவதற்கு தோதான சோளக்கொல்லை பொம்மையாக இது சேவை புரிந்தது
இதே அரசாங்கங்கள்
ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளுக்கு கையாண்ட கசப்பான கசையடிகள்
துப்பாக்கி சூடுகள்
ஆகியவற்றின் இனிப்பான துணைப் பகுதியாக அமைந்தது இந்த ஜெர்மன் சோசலிசம்
இவ்வாறு உண்மை சொல்ல சொல்லி சம்பா வர்க்கத்திற்கு எதிரான ஆயுதமாக அரசாங்கங்களில் கைகளில் பயன்பெற்ற அதேவேளை ஒரு பிற்போக்கு நலனை ஜெர்மன் குட்டி பூர்ஷ்வா குறுமதியாளர்களின் நலனை நேரடியாக பிரதிநிதித்துவம் செய்தது
ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டு வழங்கிச் சென்ற அப்போதிருந்த இங்கு பல்வேறு வடிவங்களில் கீழ் புதிது புதிதாக தோன்றி வருகின்ற குட்டி பூர்ஷ்வா வர்க்கம் நீ இப்போதுள்ள நிலைமைக்கான மெய்யான சமூக அடித்தளமாக இருக்கிறது
இந்த வர்க்கம் அழியாமல் பாதுகாக்கப்படுவது
ஜெர்மனியில் இப்போது உள்ள நிலைமை அழியாது பாதுகாக்கப்படுவதுதான்
பூர்ஷ்வா வர்க்கம் தொழில் உற்பத்தியிலும் அரசியலிலும் செலுத்தும் ஆட்சியில் இருந்து ஒருபுறம் மூலதனம் குவிவதன் மூலமும் மறுபுறம் ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்கம் வளர்ச்சி அடைவதன் மூலமும் தனக்கு நிச்சயம் அழிவு ஏற்படும் என்று அது அஞ்சுகிறது
அதன் கண்களுக்கு உண்மை சோசலிசம் இரு பறவைகளை ஒரே கல்லில் அடித்துக் கொல்வது போல தோன்றியது
அது தொற்றுநோய் போல பரவிற்று
ஊகம் என்னும் நூலாம்படையால் நெய்யப்பட்ட சொல்லலங்காரம் மிகுந்த இலக்கிய பூ பின்னல் வேலைப்பாடு உடைய அன்பில் புழுங்கி ஈரம் தோய்ந்த உணர்ச்சிப் பசப்பில் நனைந்து ஊறிய அங்கியில் இந்த வீர காவிய அங்கியில் ஜெர்மன் சோசலிஸ்டுகள் தங்களது பழமையான நிரந்தர உண்மைகள் சிலவற்றை மூடி போர்த்தி இருந்தனர்
அந்த அங்கி செய்ததெல்லாம்
இந்த வாடிக்கையாளர்களிடம் அவர்களது சரக்குகளின் விற்பனையை அதிகரிக்க செய்தது மட்டுமே
ஜெர்மன் சோசலிசம் இந்த குட்டி பூர்ஷ்வா குறுமதியாளர்களின்
சொல் ஆரவாரப் பிரதிநிதியாக இருப்பதே
தான் ஏற்று செய்தாக வேண்டிய பணி என்பதை மேன்மேலும் உணர்ந்துக் கொண்டது
ஜெர்மன் தேச முன்மாதிரியான தேசம்
ஜெர்மனிய குட்டி பூர்ஷ்வா குறுமதியாளனே முன்னுதாரண மனிதன் என்று அது பிரகடனம் செய்தது
இந்த முன் உதாரண மனிதனின் அற்ப குணம் ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மை பண்புக்கு நேர் எதிரான எளிதில் புலப்படாத உன்னதமான சோசலிச அர்த்தம் வழங்கியது
கம்யூனிசத்தின் முரட்டுத்தனமான நாசகாரப் போக்கை நேருக்கு நேர் எதிர்க்க முன் வந்ததும் தனது பாரபட்சமற்ற தன்மையை வர்க்கப் போராட்டங்களுக்கு மேலானதாக உயர்த்தி பிரகடனம் செய்ததும் அதன் செயல்பாடுகளுக்கான முத்தாய்ப்பாக அமைந்தன
தற்போது ஜெர்மனியில் சுற்றுக்கு விடப்படும் சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியீடுகள் என்று கூறிக்கொள்பவை அனைத்தும் ஒரு சிலவற்றைத் தவிர இந்த நாற்றம் எடுக்கும் சோர்வடையச் செய்யும் இலக்கிய உலகை சேர்ந்தவைதான்
பூர்ஷ்வா சமுதாயம் நிலவுவதை பாதுகாக்கும் பொருட்டு
பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதி சமூக கேடுகளுக்கு தீர்வு காண விரும்புகிறது
பொருளாதார வாதிகள் ஈகையர்கள் மனித நேயர்கள் உழைக்கும் வர்க்கங்களின் நிலைமையை மேம்படுத்துபவர்கள்
தான தர்ம காரியங்களை ஏற்பாடு செய்பவர்கள் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்ப்பவர்கள்
குடிப் பழக்க ஒழிப்புச் சங்கங்களின் நிறுவனர்கள்
சின்ன சின்ன சீர்திருத்தங்களைச் செய்யும் பல்வேறு வகையினர்
இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்
இந்த பூர்ஷ்வா சோசியலிசம் முழுமையான தத்துவ அமைப்பாக கூட உருவாக்கப்பட்டு இருக்கிறது
பு௹தோனின் வறுமையின் தத்துவத்தை எடுத்துக்காட்டாக ஒரு எடுத்துக்காட்டாக நாங்கள் குறிப்பிடுகிறோம்
சோசலிச பூர்ஷ்வாக்களுக்கு நவீன சமுதாயம் இருப்பதற்கான நிலைமைகள் அனைத்தும் வேண்டும்
அவற்றிலிருந்து தவிர்க்க முடியாதபடி தோன்றும் போராட்டங்கள் அபாயங்கள் தவிர
அவர்களுக்கு தற்போதைய சமுதாயம் வேண்டும்
அதனைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் உடைத்தெறியும் சக்திகளைத் தவிர அவர்களுக்கு
பூர்ஷ்வாக்கள் வேண்டும்
பாட்டாளி வர்க்கம் இல்லாமல் தான் ஆட்சி செலுத்தும் உலகம் தான் இயல்பாகவே இருப்பதிலேயே சிறந்தது என்று பூர்ஷ்வா வர்க்கம் கருதுகிறது
ஆறுதல் அளிக்கும் இந்த கருத்தை
பூர்ஷ்வா சோசலிசம் ஓரளவிலான அல்லது முழுமையான தத்துவ அமைப்பாக வளர்கிறது
புதிய ஜெருசலேமுக்குள் நுழையும் பொருட்டு தனது தத்துவ அமைப்பை நடைமுறைப்படுத்த பாட்டாளி வர்க்கத்தை அழைக்கும்போது உண்மையில் அது செய்வதெல்லாம் இன்றைய சமுதாயத்துக்குள்ளேயே இருக்கும்படியும் ஆனால் அந்த சமுதாயம் பற்றி கொண்டிருக்கும் வெறுப்பு மிகுந்த கருத்துக்களை தூக்கி எறியும்படியும் பாட்டாளி வர்க்கத்தை கேட்டுக் கொள்வதுதான்
கூடுதலான நடைமுறை சார்ந்த ஆனால் போதிய அளவுக்கு முறைப்படுத்தப்படாத இரண்டாவது சோசலிச வடிவம் ஒன்று ஏதோ ஒரு அரசியல் சீர்திருத்தம் அல்ல
பொருளாதார வாழ்க்கை நிலைமைகளில்
பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் ஒரு மாற்றம் மட்டுமே உழைக்கும் வர்க்கத்திற்கு அனுகூலமானதாக இருக்கும் என்று காட்டுவதன் மூலம் எந்த ஒரு புரட்சிகர இயக்கத்தின் மீதும் அவர்கள் வெறுப்பு கொள்ளும்படி செய்ய முயன்றது
ஆனால்
பொருளாதார வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் என்பதை புரட்சிகர வழிகளில் மட்டுமே சாத்தியப்பட கூடிய பூர்ஷ்வா உற்பத்தி உறவுகளை ஒழித்தல் என்றல்ல
மாறாக இந்த உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் நடக்கும் நிர்வாக மேம்பாடுகள் என்று இந்த சோசலிசம் புரிந்து கொள்கிறது
இந்த மேம்பாடுகள் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் உள்ள உறவின் எதையும் மாற்றுவதில்லை என்பதை பூர்ஷ்வா வர்க்கத்திற்கு அதன் ஆட்சிக்கான செலவை குறைக்கவும் அந்த ஆட்சிக்கான அரசாங்க வழிமுறைகளை எளிதாக்குவதற்கு மேல் எதையும் செய்யாது என்பதை புரிந்து கொள்வதில்லை
வெறும் சொல் அணியில் தான் பூர்ஷ்வா சோசலிசம் தனக்கான பொருத்தமான வெளிப்பாட்டை பெறுகின்றது
தடியில்லா வணிகம் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக...
காப்புச் சுங்க வரிகள்
தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக...
தனியறை அமைப்பு உள்ள சிறைச்சாலைகள்
தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக...
பூர்ஷ்வா சோசியலிசத்தில் உள்ள மிகச்சிறந்த சொல் இதுதான் நேர்மையாக அது கூறும் ஒரே சொல்
பூர்ஷ்வாக்கள் பூர்ஷ்வாக்களாக இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே என்று அடித்துக் கூறுவதில் அதனுடைய சோசலிசம் அடங்கி விடுகின்றது
நாம் இங்கு பேசுவது நவீன கால மாபெரும் புரட்சிகள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை வெளிப்படுத்திய இலக்கியத்தை பற்றி அல்ல
நில பிரபுத்துவ சமுதாயம் தூக்கி எறியப்பட்ட காலகட்டத்தில்
எங்கும் கொந்தளிப்பு இருந்த வேளையில்
தனது சொந்த வர்க்கு நலன்களை முன்னெடுத்துச் செல்ல பாட்டாளி வர்க்கம் மேற்கொண்ட முதல் முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி தோல்வி கண்டன
அதற்கு காரணம் பாட்டாளி வர்க்கமூமே குறை வளர்ச்சி நிலையில் இருந்ததும் உண்மையில் பூர்ஷ்வா சமுதாயத்தின் விளை பொருளாக மட்டுமே இருக்கக் கூடியதும்
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு தேவையானதுமான பொருளாதார நிலைமைகள் இல்லாமல் போனதும்தான்
பாட்டாளி வர்க்கத்தின் இந்த முதல் இயக்கங்களோடு சேர்ந்து தோன்றிய புரட்சிகர இலக்கியம் தவிர்க்க முடியாதபடி அதன் உள்ளடக்கத்தில் பிற்போக்கானதாக இருந்தது
அது எல்லோருக்கும் புலன் ஒறுத்தலையும் பக்குவமற்ற சமத்துவத்தையும் போதிக்கிறது
சோசியலிசம் மற்றும் கம்யூனிசம் என்னும் பெயருக்கேற்ற சிந்தனை அமைப்புகள்
ஸேன் ஸிமோன் ஃபூரியெ ஓவென் முதலானவர்களின் சிந்தனை அமைப்புகள்
பாட்டாளி வர்க்கத்திற்கும்
பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டத்தின் மேலே நாம் விவரித்துள்ள முதலாவது வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் தோன்றின
இந்த சிந்தனை அமைப்புகளை உருவாக்கியவர்கள் அன்று நிலவிய சமுதாயத்திலேயே வர்க்கப் பகைமைகளும் அதை சிதைய செய்யும் சக்திகள் செயல்பட்டு வந்ததையும் பார்க்கத்தான் செய்கின்றனர்
ஆனால்
பாட்டாளி வர்க்கத்திடம் வரலாற்று ரீதியான சுய செயல்பாட்டையோ தனித்தன்மையான அரசியல் இயக்கம் எதனையுமோ அவர்கள் பார்ப்பதில்லை
தொழில் உற்பத்தியின் வளர்ச்சியுடனேயே வர்க்க பகைமைகளும் வளர்ச்சி அடைவதால்
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பொருளாதார முன் நிபந்தனைகளை அவர்கள் பார்ப்பதில்லை
இந்த முன் நிபந்தனைகளை உருவாக்குவதற்கான
ஒரு சமூக விஞ்ஞானத்தை
சமூக விதிகளை தேடி செல்கிறார்கள்
சமூக ரீதியான செயல்பாட்டுக்கு பதிலாக அவர்கள் தனிப்பட்ட முறையில் புதிதாக கண்டுபிடித்த செயல்பாடு
விடுதலைக்கான வரலாற்று நிலைமைகளுக்கு பதிலாக கற்பனையில் உருவாக்கப்பட்ட நிலைமைகள்
ஒரு வர்க்கமாக படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் பாட்டாளி வர்க்க ஒழுகமைப்புக்கு பதிலாக அவர்களது சொந்த புனைவு உருவாக்க சமுதாயம்
அவர்களைப் பொறுத்தவரை எதிர்கால வரலாறு அவர்களது சமூகத் திட்டங்களுக்கான பிரச்சாரத்திலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அடங்கி விடுகின்றது
எல்லோரையும் பார்க்க மிகவும் துன்பப்படுகிற வர்க்கம் என்னும் முறையில் முதன்மையாக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் உணர்வு அவர்களது திட்டங்களில் உள்ளது என்பது உண்மைதான்
மிகவும் துன்பப்படுகிற வர்க்கம் என்னும் இந்த கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை பார்க்கிறார்கள்
வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி அடையா நிலைமையும் வாழ்க்கையில் இவர்களுக்குள்ள சொந்த நிலையும் மேற் சொன்ன வர்க்க பகைமையிலிருந்து மிகவும் மேலே இருப்பவர்களாக தங்களை கருதிக் கொள்ளும்படி செய்கின்றன
இவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலையையும் மிகவும் வசதி படைத்தவர்களின் நிலையையும் கூட மேம்படுத்த விரும்புகிறார்கள்
எனவே
அவர்கள் வேறுபாடு பார்க்காமல் சமுதாயம் முழுவதற்கும் உண்மையில் எல்லோருக்கும் முதலாக ஆளும் வர்க்கத்திற்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடுகிறார்கள்
அவர்களது திட்டம் சாத்தியமான மிகச்சிறந்த சமுதாயத்திற்கான சாத்தியமான மிக சிறந்த திட்டம் என்று நாம் புரிந்து கொள்வதுதான் தேவையாம்
எனவே
இவர்கள் எல்லா அரசியல் செயல்பாட்டையும்
குறிப்பாக
எல்லா புரட்சிகர செயல்பாட்டையும் நிராகரிக்கிறார்கள்
சமாதான வழிகளில் தங்கள் குறிக்கோள்களை அடைய விரும்புகிறார்கள்
இயல்பாகவே தோல்வியடைகின்ற சிறு பரிசோதனைகளை செய்வதன் மூலமும் முன்னுதாரணமாக திகழ்வதன் மூலமும் புதிய சமூக சுவிசேஷத்திற்கான பாதையை உருவாக்குகிறார்கள்
பாட்டாளி வர்க்கம் இன்னமும் மிகவும் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த காலத்தில்
அதாவது அதுவே தனது சொந்த நிலையைப் பற்றிய கற்பனையான கருத்து ஒன்றைக் கொண்டிருந்த காலத்தில்
வருங்கால சமுதாயத்தைப் பற்றி தீட்டப்பட்டிருந்த இந்த கற்பனையான சித்திரம் சமுதாயத்தை பொதுவாக மறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்று அந்த வர்க்கத்திற்கு முதன் முதலில் தோன்றிய உள்ளுணர்வு சார்ந்த வேட்கைகளுக்கு இணை பொருத்தமானதாக இருந்தது
எனினும் சோசலிச கம்யூனிஸ எழுத்துகளில் சில விமர்சன பகுப்பாய்வு அம்சுகளும் இருக்கின்றன
நிலவுகின்ற சமுதாயத்தின் அனைத்து அடித்தளங்களையும் அவை தாக்குகின்றன
ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கான மிகவும் மதிப்புமிக்க விடயங்களை வழங்கின
வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கான அவற்றின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள்
எடுத்துக்காட்டாக
நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் உள்ள முரண் தன்மை
குடும்ப அமைப்பு
தனியார் ஆதாயம்
கூலி உழைப்பு
ஆகியவற்றை ஒழித்தல்
சமுதாய நல்லிணக்கத்தை பிரகடனப்படுத்துதல்
அரசை உற்பத்திக்கான நிர்வாகமாக மட்டுமே இருக்கும் படி மாற்றுதல்
வர்க்கப்பகைமைகள் மறைந்து ஒழிவதை சுட்டிக்காட்டுகின்றன
இப்போதுதான் வளர தொடங்கியுள்ள இன்னமும் தெளிவற்ற சரிவர வரையறுக்கப்படாத வடிவத்தில் மட்டுமே வர்க்கப் பகைமையை அறிந்துள்ள இந்த திட்டங்களும் கூட இன்னமும் முற்றிலும் கற்பனவாத தன்மையுடையதாகவே இருக்கின்றன
விமர்சனப் பகுப்பாய்வு
கற்பனாவாத சோசலிசம் கம்யூனிசம்
ஆகியவற்றின் வரலாறு ரீதியான முக்கியத்துவத்துக்கும்
வரலாற்று வளர்ச்சிக்கும் உள்ள உறவு தலைகீழ் விகிதத்தில் உள்ளது
எந்த அளவுக்கு வர்க்க போராட்டம் வளர்ச்சி அடைந்து ஒரு கொள்கிறதோ
அந்த அளவுக்கு கற்பனையாக இந்த போராட்டத்திற்கு மேலானதாக உயர்த்திக் கொள்வதும்
கற்பனையான முறையில் அதனை தாக்குவதும்
நடைமுறை ரீதியான மதிப்பு அனைத்தையும்
கோட்பாடு ரீதியான நியாயம் அனைத்தையும்
இழந்து விடுகின்றன
எனவே
இந்த சிந்தனை அமைப்புகளை தோற்றுவித்தவர்கள் உண்மையில் புரட்சிகரமானவர்களாக இருந்தாலும்
அவர்களது சீடர்கள் எப்போதுமே பிற்போக்கு குறுகுறுக்களாகவே அமைகின்றனர்
பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு எதிராக அவர்கள் தங்கள் ஆசான்களின் மூலக்கருத்துகளை கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர்
எனவே
அவர்கள் இடைவிடாது வர்க்கப் போராட்டத்தை மழுகடிக்கவும்
பகைமையை சமரசப்படுத்தவும் செய்கின்றனர்
தங்களது கற்பனாவாத சமூகத் திட்டத்தை சோதனை அளவில் கை கூடி வரச் செய்தல் பற்றி . . .
ஆகாய கோட்டைகளை கட்டுவதற்காக அவர்கள் பூர்ஷ்வா இதயங்கள் பணப்பைகள் ஆகியவற்றின் ஈகை பண்புக்கு வேண்டுகோள் விடுகிறார்கள்
மெல்ல மெல்ல அவர்கள் மேலே வரிக்கப்பட்டுள்ள பிற்போக்கு அல்லது பழமை பேண் சோசியலிஸ்ட் களின் வகைக்கு தாழ்வுறுகின்றனர்
இவர்களிடம் மேலும் முறைப்படுத்தப்பட்ட பகட்டு புலமை இருப்பதும்
தங்களது சமூக விஞ்ஞானத்தின் அதிசய விளைவுகள் பற்றி வெறித்தனமான மூடநம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமே
இவர்களை மேற் சொன்ன சோசியலிஸ்ட் களிடமிருந்து வேறுபடுத்துகின்றன
எனவே
அவர்கள் தொழிலாளிகள் மேற்கொள்ளும் எல்லா அரசியல் செயல்பாட்டையும்
புதிய சுவிசேஷத்தின் மீது ஏற்படும் கண்மூடித்தனமான அவநம்பிக்கையில் இருந்து மட்டுமே எழக்கூடிய செயல்பாட்டை வன்மையாக எதிர்க்கிறார்கள்
கம்யூனிஸ்டுகளுக்கும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சிகளுக்கும் உள்ள உறவை இரண்டாம் பிரிவு தெளிவுபடுத்தி உள்ளது
எனவே
அது இங்கிலாந்தில் உள்ள சாசனவாதிகளுக்கும் வட அமெரிக்காவில் உள்ள விவசாய சீர்திருத்தவாதிகளுக்கும் பொருந்தும்
பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான குறிக்கோள்களையும்
நலன்களையும் நிறைவேற்றுவதற்காக அவர்கள் போராடுகிறார்கள்
ஆனால்
இன்றைய இயக்கத்தில் அவர்கள் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்
பிரான்சில் பழமைப்பேண் மற்றும் தீவிரவாத பூர்ஷ்வாக்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் சோசியலிசம் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள்
அதேவேளை
புரட்சி மரபிலிருந்து வரப்பெற்ற சொல்லாட்சிகள் மாயைகள் ஆகியவற்றின் மீது விமர்சன ரீதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் உரிமையை அவர்கள் கைவிடுவதில்லை
சுவிட்சர்லாந்தில் அவர்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள்
அதேவேளை
தீவிரவாத கட்சி பிரெஞ்சு நாட்டில் இருப்பதைப் போன்ற ஜனநாயக சோசலிசவாதிகளை கொண்ட ஒரு பகுதியும் தீவிர பூர்ஷ்வாக்களை கொண்ட இன்னொரு பகுதியுமான ஒன்றுக்கொன்று முரண்பட்ட கூறுகளை கொண்டிருப்பதை அவர்கள் மறப்பதில்லை
போலந்துக்காரர்கள் இடையே அவர்கள் விவசாய புரட்சியை தேசிய விடுதலைக்கு முன் நிபந்தனையாக வைக்கின்ற 1848 ஆம் ஆண்டில் கிராக்கோவில் கிளர்ச்சி ஏற்பட காரணமாக இருந்த கட்சியை ஆதரிக்கிறார்கள்
ஜெர்மனியில் பூர்ஷ்வா வர்க்கம் புரட்சிகரமான வழியில் செயல்பட தொடங்கிய உடனே கம்யூனிஸ்ட் கட்சி பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்து வரம்பில்லா முடியாட்சி
நில பிரபுத்துவ நிலச்சொத்து
குட்டிபூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்றது
பூர்ஷ்வா வர்க்கம் தனது ஆசியுடன் கொண்டு வந்தாக வேண்டிய சமூக அரசியல் நிலைமைகளை ஜெர்மன் தொழிலாளர்கள் நேரே அப்படியே எடுத்துக்கொண்டு அவற்றை பல வகை ஆயுதங்களாக பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தும் பொருட்டு ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்கள் தூக்கி எறியப்பட்ட பிறகு
பூர்ஷ்வா வர்க்கத்திற்கே எதிரான போராட்டத்தை உடனடியாக தொடங்கும் பொருட்டும்
பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான பகை முரண்பாட்டை பற்றிய மிகத் தெளிவான சாத்தியமான உணர்வை பாட்டாளி வர்க்கத்திற்குள் உருவாக்குவதை அவர்கள் ஒரு நிமிடம் கூட நிறுத்துவதில்லை
ஜெர்மனி பூர்ஷ்வா புரட்சி நடக்கும் தறுவாயில் இருப்பதால் கம்யூனிஸ்டுகள் முதன்மையாக ஜென்ம னியின் மீது தாங்கள் கவனத்தை செலுத்துகிறார்கள்
இந்த புரட்சியை அது பொதுவாக ஐரோப்பிய நாகரிகத்தின்
மேலும் முன்னேறிய நிலைமைகளின் கீழும்
17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிலும் இருந்ததை காட்டிலும்
அதிக வளர்ச்சி பெற்றுள்ள பாட்டாளி வர்க்கத்துடன் நடத்திக் கொண்டிருப்பதால் ஜெர்மனியில்
பூர்ஷ்வா புரட்சி பாட்டாளி வர்க்க புரட்சிக்கான உடனடியான பீடிகையாகவே இருக்க முடியும்
சுருங்கக் கூறின்
கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக அரசியல் நிலைமைகளை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கிறார்கள்
இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமை பிரச்சனையை
அச்சமயத்தில் அப்பிரச்சனை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள வடிவத்தில் இருக்கிறது என்பதை
பொருட்படுத்தாமல்
அதுதான் அடிப்படை பிரச்சனை என்று வலியுறுத்துகிறார்கள்
கடைசியாக
கம்யூனிஸ்டுகள் எங்கும் எல்லா நாடுகளையும் சேர்ந்த
ஜனநாயகக் கட்சிகளின் அணி சேர்க்கைக்காகவும் அவற்றுக்கிடையில் ஒத்திசைவு ஏற்படுத்துவதற்காகவும் வேலை செய்கிறார்கள்
கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துகளையும் நோக்கங்களையும் மூடி மறைப்பதை வெறுத்து ஒதுக்குகிறார்கள்
இன்றுள்ள சமுதாய அமைப்பு ஒவ்வொன்றையும் பலவந்தமாக வீழ்த்தினால்தான் தமது குறிக்கோள்கள் நிறைவேறும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்
ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும்
ஒரு கம்யூனிச புரட்சி வருகிறதென்று
இதில் பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை
தங்கள் அடிமை சங்கிலியை தவிர
அவர்கள் வென்று பெறுவதற்கு ஓர் உலகம் இருக்கின்றது
அனைத்து நாட்டு பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்

No comments:
Post a Comment