டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
(விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பாடல் டப்பிங்)
குதிர தமிழர கழுத ஆக்கிட்டானே
தமிழ வேதம்சொல்லி பன்னி மேச்சுட்டானே
எட்டாயிரம் ஆண்டு முன்னே
நான் வணிகம் செஞ்சு யாவரும் கேளிர் பாடினேன்
பண்பாட்டின் மேன்மை நானே
நீ காட்ட எரிச்சு நாட்ட எரிச்ச ஆளு நீயே
வேதம் ஓதுதே வறுமை வாட்டுதே
நெருப்பா சூழுதே சாகுதே வரலாறே
கீழடி ஈன்றதே பூணூல் நடுங்குதே
இந்தியா ஜாதகமே தமிழ் எழுதுமே
டூப்பான சந்தையும் ரீல்ஸான ஆட்சியும்
ரிஸ்க் ஆன காலம் நடக்கிறது
வைகையின் நீரில் வேதத்தீ சாகும்
நல்லுலகக் கனவு சிலிர்க்கிறது
ஹே...
டூப்பான சாதியும் பொய்யான வாழ்க்கையும்
வேஸ்ட் என்ற ஞானம் பிறக்கிறது
வைகையின் நீரில் வேதத்தீ சாகும்
சமத்துவம் வாழ்வில் மலர்கிறது
மண்ணிலே இந்தி மின்னலே மின்னலே கண்ணு போச்சே
தாய்மொழி செத்த தேசங்கள் தேய்ந்ததே நீ பார்த்தா
உயிர் விட்டு போகும் மக்கள் வாழ
சந்ததிக்கு தாய்மொழி சேர்க்குமே
துப்பி துப்பி ஆண்கள் ஓதும் மந்திரம்
தாய்மொழி பாரதம் இல்லையே
கீழடி தமிழ் கொஞ்சம் பார்த்தா - ஹே கியூட்டே
சமஸ்கிருத டேமேஜ் புரியும் - ஹே பேட்டி
தொழில்நுட்பம் உன் பேச்ச கேட்டா - ஹே நார்ட்டி
சிம்பன்சியா கணினிகள் தாவும்
வேதம் ஓதுதே வறுமை வாட்டுதே
நெருப்பா சூழுதே சாகுதே வரலாறே
கீழடி ஈன்றதே பூணூல் நடுங்குதே
இந்தியா ஜாதகமே தமிழ் எழுதுமே
டூப்பான சந்தையும் ரீல்ஸான ஆட்சியும்
ரிஸ்க் ஆன காலம் நடக்கிறது
வைகையின் நீரில் வேதத்தீ சாகும்
நல்லுலகக் கனவு சிலிர்க்கிறது
ஹே...
டூப்பான வர்ணமும் மெய்யான வர்க்கமும்
மிக்ஸ் ஆன காலம் முடிகிறது
வைகையின் நீரில் வேதத்தீ சாகும்
நட்பாக உலகம் சுழல்கிறது
No comments:
Post a Comment