எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, February 24, 2024

டெல்லிக்கிளி

டெல்லிக்கிளி

 

காளாண் பயிரிட பச்சிலை கத்திரித்த

பல லட்சம் எறும்புகள்போல

பச்சை கொடி கட்டி

டிராக்டர் முழங்க

டெல்லி சலோ விவசாயிகள்

அணிவகுத்துச் சென்றனர்

 

டெல்லி கோட்டைபோல

கால்விரித்து நின்றது

காவிநிற வெட்டுக்கிளி

 

பச்சிலை எம் உரிமையென

திசையெங்கும் முழங்கின எறும்புகள்

 

அலட்சியம் செய்த டெல்லிக்கிளி

முட்கள் நிறைந்த முன் கால்களால்

எறும்புகளைக் கவ்வியது

 

இறகசைத்து பறந்தும்

பின் கால்களை உதைத்தும்

அணிவகுத்த எறும்புகளைச்

சிதறி ஓடச் செய்தது

 

தாமரையின் மொட்டு போன்ற கூரிய வாயால்

கையில் கவ்விய எறும்புகளைக் கொய்து தின்றது

 

எறும்புகளின் பச்சிலைகள் சிவப்புக் கொடிகளாக மாறின

கோட்டையின் கால்களை திசையெங்கும் தாக்கின

 

கால் பரப்பி வீழ்ந்தது டெல்லிக்கிளி

மொய்த்துக் கொன்றன எறும்புகள்

 

பின்னொரு காற்றுப் பொழுதில்

காவி இறகும் தாமரை மொட்டு போன்ற தலையும்

பிறழ்ந்தன உருண்டன முடிந்தன

No comments:

அதிகம் படித்தவை