எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, October 6, 2016

தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு

புதியவன் தன்விபரக் குறிப்பு



தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு

முனைவர் பட்டத்திற்காகப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் வழி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்பெறும் ஆய்வேடு

(முனைவர் பட்டம் 17.09.2018)



ஆய்வாளர்
கே.சிவக்குமார்
சே.எண்:1948


நெறியாளர்
முனைவர் சீ. பக்தவத்சல பாரதி


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி - 605 008
2016



முனைவர் சீ. பக்தவத்சலபாரதி
இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605 008.

நெறியாளர் சான்றிதழ்

          புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இலக்கியப் புலத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட கே.சிவக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ள தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு என்னும் தலைப்பில் அமைந்த இந்த ஆய்வேடு எனது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது என்றும், இதற்கு முன்னர் வேறு எந்த ஆய்வுப் பட்டத்திற்கும் இது அளிக்கப் பெறவில்லை என்றும் சான்றளிக்கின்றேன்.

இடம் : புதுச்சேரி
நாள்  :
                                                                                                            (சீ.பக்தவத்சலபாரதி)                                                                                                             நெறியாளர் கையொப்பம்


                                                            (சீ.பக்தவத்சலபாரதி)
                                          இயக்குநர் மேலொப்பம்





கே. சிவக்குமார்
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
இலக்கியப் புலம்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605 008.

ஆய்வாளர் உறுதிமொழி

            புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இலக்கியப் புலத்தில் முனைவர் சீ. பக்தவத்சலபாரதி அவர்கள் மேற்பார்வையில் உருவாக்கப் பெற்ற தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு என்னும் தலைப்பில் அமைந்த இந்த ஆய்வேடு எனது சொந்த முயற்சியால் உருவானது என்றும், இதற்கு முன்னர் வேறு எந்த ஆய்வுப் பட்டத்திற்கும் இது அளிக்கப் பெறவில்லை என்றும் உறுதியளிக்கின்றேன்.

இடம் : புதுச்சேரி
நாள்  :
                                                                                                            (கே.சிவக்குமார்)                                                                                                                  ஆய்வாளர் கையொப்பம்

                                                            (சீ.பக்தவத்சலபாரதி)
                                              நெறியாளர் மேலொப்பம்


நன்றியுரை
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு அனுமதியளித்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களுக்கும், பதிவாளர் அவர்களுக்கும், நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சீ. பக்தவத்சலபாரதி அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
            இந்த ஆய்வேட்டை எழுதி முடிப்பதற்கு சிறந்த முறையில் என்னை நெறிபடுத்திய நெறியாளரும் எனது முன்மாதிரிகளில் தலைசிறந்தவருமாகிய முனைவர் சீ.பக்தவத்சலபாரதி அவர்களுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன்.
            நினைவில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கடந்த பேராசிரியர் முனைவர் .பரசுராமன் ஐயா அவர்களை நினைத்துப் போற்றுகிறேன். பு.மொ...நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர்கள் இரா.சம்பத், சிலம்பு நா.செல்வராசு, .பிலவேந்திரன், .ரவிசங்கர், வி.பிரகதி ஆகிய அனைவருக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். எனது கல்விக்கு நிதியுதவி செய்த இரா.வேங்கடேசன் அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றி. தேவையான நூல்களைக் கொடுத்து ஒத்துழைத்த நேசத்திற்குரிய நூலகர் இராசேந்திரன் அவர்களுக்கும் அறிவன்புடன் நன்றி. நிறுவன அலுவலர்களுக்கும் சக ஆய்வாளர்களாக ஒத்துழைத்த புதன் வட்டம், தேடலை நோக்கி வாசிப்புக் களத்தில் இயங்கிய தோழர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.
            ஆய்வு நிறுவனம் சாராத பலரும் எனது முனைவர் பட்ட ஆய்வை நிறைவேற்றுவதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். அனைவரையும் இவ்விடம் நினைத்துப் போற்ற கடமைப்பட்டுள்ளேன்.
            என்னை உயிராக நேசிக்கின்ற பெற்றோர்கள் தாய் கே.ருக்மணி, தந்தை .கேசவன், இணையர் நாகராஜன் வினிபா மேலும் கோபி உமா மற்றுமுள்ள குடும்பத்தினர்களும் உறவினர்களும். புதுச்சேரியில் என்னை அரவணைத்து ஆய்வேட்டை முடிக்கச் செய்தவர்கள் நேசத்திற்குரிய தேநீர் .சந்திரசேகர், பெற்றெடுக்காவிட்டாலும் என் பெற்றோருக்கு இணையான இணையர்கள் செ.கலைமணி, சா.செல்லப்பன் குடும்பத்தினர்,  புதுவைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராகிய நேசமிகு தோழன் இலங்கேஸ்வரன் இவர்கள் மூவருக்கும் நன்றி சொல்ல அதற்கும் மேலான வார்த்தைகளைத் தேடிப் பெற விரும்புகின்றேன். மேலும் பல்வேறு சமூகவிஞ்ஞானக் களங்களில் செயலாற்றுகின்ற தோழர்கள் குறிப்பாக புதுவையோடு என்னைத் தொடர்புபடுத்திய தோழர் ஊடாட்டம் காமராசன், மனுவேல் அகராதி, பு.ஜ.தொ.மு.சேகர். எனது ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரித்து வெளியிட்டுள்ள புதிய பனுவல், உங்கள் நூலகம் மற்றும் பொதுவாக எனது படைப்புகளை அங்கீகரித்துள்ள இதழ்கள். பாதுகாவலர் பணியிலும் ஆய்விலும் தோழனாகிய சு.குமார், எனது இரவு நேர பாதுகாவல் பணியிடமாகிய மகளிர் தொழிற்நுட்ப கல்லூரியின் ஆசிரியர்களும் அலுவலர்களும் மாணவியர்களும். குறிப்பாகக் கட்டுமானக் கலையியலின் துறைத்தலைவர் திரு. பிரபு அவரது குடும்பத்தினர், கணினி துறை ஆசிரியர்கள் சரவணன் அவரது குடும்பத்தினர், முருகன், S.K.ஜெகதீசன். செம்படுகை நன்னீரகம் அப்பா ராமமூர்த்தி குடும்பத்தினர், நாவற்குளம் நண்பர் பன்னீர் குடும்பத்தினர், புத்தகப் பூங்கா நிறுவனத்தார், லாசுபேட்டை அம்பேத்கர் மாணவர் விடுதி நண்பார்கள் குறிப்பாக அமுரா ராஜவேல், புதுவைப் பல்கலைக்கழக நண்பர்கள் குறிப்பாக முனைவர்கள் மு.செல்வக்குமார், ஜனார்த்தனன், கந்தசாமி, சிவச்சந்திரன், ஆய்வாளர்கள் சிவராஜ், கார்த்திகா இணையர் சுரேஷ், அசோக், அடிசன், சீ.சியாமளாகௌரி, சாந்தி, பத்மா, மாணவர்கள் தனம், பரமேஸ்வரி, நந்தா, புதுவைப்பல்கலைக்கழக சித்தர் இலக்கிய ஆய்வுப் பணியின் வழியாக உதவிய பேரா.முனைவர் இளமதிசானகிராமன் அம்மா அவர்கள், கலைமாமணி நந்திவர்மன் அவர்கள், மருத்துவர் விஜயன், மஞ்சினி, ரவி, புவனா அக்கா, சரோஜா அக்கா அவர்கள், பிரெஞ்ச் பேராசிரியர் முனைவர் திருமுருகன் அவர்கள். காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய நண்பர்கள் குறிப்பாக ராஜேந்திரன், சந்தோஷ், தேவி, ராஜகுமாரி. கலை இலக்கியப் பண்பாட்டு மையம், ஆய்வாளர்கள் சிவராமபாலசந்திரன் இணையர் ஹேமமாலினி, சௌ.சுரேஷ், பெர்னாட்சா, பொன்னுச்சாமி, கணிப்பொறிவீரர் ஸ்ரீதர், திருப்பூர் பள்ளி ஆசிரியர் தே.செந்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் கோவிந்தன் அவர்கள், லாசுபேட்டை மற்றும் மங்கலம் சமூகவிஞ்ஞான குட்டி நண்பர்கள், நாவலர் பள்ளி சமூக விஞ்ஞான நண்பர்கள் குழு. லாசுபேட்டை பகுதி வாழ் நண்பர்கள் குறிப்பாக திரு.இலக்கியன், எழுத்தாளர் தோழர் பா.செயப்பிரகாசம், பழக்கடை விஜையண்ணா, திரு.கிருஷ்ணன் பானு குடும்பத்தினர், மது பேன்ஸி நிறுவன குடும்பத்தார், ஜெகதீசன் ஜெராக்ஸ், விக்னேஷ் நகலகம் ...
            நனவாலும் நினைவாலும் என்னைப் பிரியாது இணைந்திருக்கின்ற நேசத்திற்குரிய சக நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் பலரது பெயர்களைக் குறிப்பிடாவிட்டாலும் நான் நினைத்து மகிழ்கின்ற உங்கள் அனைவருக்கும் சொல்லி முடிக்க விரும்புகின்றேன்! அனைவருக்கும் எனது பேரன்பான நன்றிகள்.
கே.சிவக்குமார்



பொருளடக்கம்

1.
முன்னுரை

1-24
2.
இயல் -1
இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்


25-76

3.
இயல் – 2
வாழ்விடங்களும் சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளும்


77-125

4.
இயல் – 3
சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்


126-178

5.
இயல் – 4
வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்


179-218

6.
முடிவுரை
219-230

7.

புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்
231-232
8.
துணை நூல்கள்
233-241

















 

3 comments:

Puthiyavan said...

பேரா. இரா.சீனிவாசன் (புதிய பனுவல்)
panuval@gmail.com

உங்கள் ஆய்வேட்டைக் கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உண்மையில் உங்கள் தொடர்செயல்பாடுகளை நோக்கி, நீங்கள் ஆய்வேட்டை முடிப்பீர்களா? என்று ஐயம் கொண்டிருந்தேன். ஏனென்றால் சில ஆண்டுகளைச் செலவிட்டும் கடின உழைப்பைச் செலுத்தியும் தொடங்கிய ஒரு செயலை முடிக்காமல் விடுவது ஏற்புடையதல்ல. மேலும், நமது சமூகத்தில் வாழ்வதாரமும் தொடர்ந்து நமது பணிகளைச் செய்யவும் சில கூறுகள் அவசியமாகின்றன. அவற்றில் கல்வியும் பணியும் முக்கியமானவை. அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாம் நமக்கு உகந்த வேறு செயல்களில் ஈடுபடலாம். மேலும் உங்களைப் போன்று ஆர்வமும், ஆற்றலும் ஈடுபாடும் உழைப்பும் கொண்ட இளைஞர்கள் சிலரே உள்ள நிலையில் தொடங்கிய பணியை விட்டுவிலகுவதை என்னால் ஏற்க இயல்வில்லை. ஆகவேதான் நீங்கள் தெதாடர்ந்து உங்கள் பணிகள் பற்றி எனக்குத் தெரியப்படுத்திய நிலையிலும் நான் அவற்றை ஊக்குவிக்கவோ கருத்துரைக்கவோ செய்யவில்லை.
உங்கள் ஆய்வேட்டைக் கண்டேன். நெறியாளரும் நீங்களும் சரியான பாதையில் செயல்படுபவர்கள் என்பதால் ஆய்வேடு சிறப்பானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. என் நம்பிக்கை பொய்க்கவில்லை. எளிதாகவும்சரளமாகவும் செல்கின்ற மொழியும் பார்வவையும் நன்கு கூடிவந்துள்ளன. பேரா. சிவத்தம்பி, கைலாசபதி, வானமாலை முதலியவர்களின் விளக்கங்களின் அடிப்படையில் ஆய்வேட்டை தொடங்கி இருக்கிறீர்கள். ஆய்வுப் பகுப்பு, கருதுகோள், அணுகுமுறை முதலானவை சிறப்பாக அமைந்துள்ளன. ஆய்வேட்டை முழுமையாக வாசிக்கவில்லை.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
ஆய்வேடு பற்றிய என்னுடைய மதிப்பீடுகளை வெளியிடவேண்டாம். இப்போது இது மந்தண நிலையிலேயே உள்ளது. பொதுவாய்மொழித்தேர்வு நடைபெற்ற பின்னர் ஆய்வேடு பற்றி விரிவாக எழுதுவேன்.
நன்றி

Puthiyavan said...

Ma Ra
kanaiyazhi2011@gmail.com

ஆய்வேடு கிடைத்தது. பொருளடக்கம் பார்த்தேன். உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்

Puthiyavan said...

Balasingam Athimoolam
balasingam1951@gmail.com

Feb 27, 2019, 11:38 AM

KINDLY ARRANGE TO ISSUE A COMP. COPY OF THIS BOOK

FOR OUR R.STUDENTS.

REGARDS,

LIBRARIAN,

MAILING ADDRSS :

---------------------------------

LIBRARIAN,V.O.C.LIBRARY-ARCHIVES,

HISTORICAL OLD PORT, BEACH ROAD, TUTICORIN 628 01

M : 9442051238 / 9385632166

அதிகம் படித்தவை