எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, August 8, 2016

சமூக அறிவைக் கட்டுவோம்

சமூக அறிவு பற்றிய சமூக விஞ்ஞானப் பகுப்புகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்ற பயிற்சிக்காக சந்த ஓசை அழகில் தயாரிக்க முயற்சித்து பயன்படுத்தப்பட்ட பாடல். அறிவெனும் பெரும் பசி கட்டுரையில் உவமையாக விவரிக்கப்பட்ட வீட்டை இப்பாடலிலும் உணரலாம். அறிவன்புடன் புதியவன்.

சமூக அறிவைக் கட்டுவோம்
சமூக அறிவை வீடு கட்டி
சந்தோசமா வாழுங்க
வீட்டைக் கட்டிக் காட்டுங்க
அடித்தளத்தைப் போடுங்க

உற்பத்தி முறையியல்
அடித்தளமா இருக்குங்க
அஞ்சு மாடி வீடுங்க
அடித்தளத்தில் கட்டுங்க

சமூக வாழ்வியல்
அடி வீடாய் இருக்குங்க
முதல் மாடி ஏறுங்க
உள்ளத்தியலைப் பாருங்க

ரெண்டாம் மாடி ஏறுங்க
கருத்தியலைக் கேளுங்க
மூன்றாம் மாடி ஏறுங்க
கருத்து நிலைப் பாடுங்க

நான்காம் மாடி ஏறுங்க
உலகப்பார்வை பாருங்க
மொட்ட மாடிக்கு ஓடுங்க
தத்துவ அடிப்படை பேசுங்க

படிப்படியா இறங்குங்க
வீட்டுக்கு வெளியே நில்லுங்க
வீட்டை முழுசா பாருங்க
அடித்தளத்தைக் காணம்ங்க

அடி வீடும் அஞ்சு மாடியும்
முழுசா தெரியுது பாருங்க
முழுசா தெரியுற வீட்டுக்கு
பண்பாட்டியல்னு பேருங்க

சமூக அறிவு வீடு கட்டி
சந்தோசமா வாழுங்க
சமூக விஞ்ஞான வாழ்க்கைங்க
விடுதலை கீதம் பாடுங்க…


No comments:

அதிகம் படித்தவை